உள்ளடக்கத்துக்குச் செல்

டி எஃப்-21

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாங்-ஃபெங் 21 என்பது இரட்டை நிலை, திட எரிபொருள் உந்துகணையுடைய, ஒற்றை வெடிமுனையுடைய நடுத்தர தூரம் பாயும் ஏவுகணை ஆகும். இதன் பெயருக்கு 'கிழக்குக் காற்று' என்று பொருள். இது தாங் ஃபெங் வகை ஏவுகணைகளில் ஒன்றாகும். 1960களின் பிற்பகுதியில் இதன் தயாரிப்பு தொடங்கப்பட்டு 1985-86ல் முடிக்கப்பட்டது. எனினும் 1991 வரை இது பயன்பாட்டுக்கு வரவில்லை. ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு துறையின் 2008ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி சீனாவிடம் 60 முதல் 80 ஏவுகணைகளும்[1] 60 ஏவுகணை செலுத்துவான்களும் உள்ளன. சீனாவால் ஆண்டுக்கு சுமார் 10 முதல் 11 ஏவுகணைகளை தயாரிக்க முடியும்.[2]

இதன் ஒரு வகையான டி எஃப்-21டி என்பது உலகின் முதல் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எனக் குறிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_எஃப்-21&oldid=3311982" இலிருந்து மீள்விக்கப்பட்டது