உள்ளடக்கத்துக்குச் செல்

டி. வி. கொச்சுபாவ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. வி. கொச்சுபாவ
பிறப்பு(1955-11-28)28 நவம்பர் 1955
காட்டூர், கேரளம், இந்தியா
இறப்பு25 நவம்பர் 1999(1999-11-25) (அகவை 43)
கோழிக்கோடு, கேரளம்
தொழில்புதின ஆசரியர், எழுத்தாளர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • விருதாசதனம்
  • ஜமாலிகா
  • பெரும்களியாட்டம்
  • சூச்சிக்குழாயில் ஒரு யாக்கோப்
  • உபஜன்மம்
குறிப்பிடத்தக்க விருதுகள்
  • 1989 அங்கனம் விருது
  • 1989 எஸ்.பி.டி. விருது
  • 1995 செருகாடு விருது
  • 1996 புதினத்துக்கான கேரள சாகித்ய அகாடமி விருது
  • 1997 தோப்பில் ரவி விருது
  • 1997 வி. பி. சிவகுமார் கேளி விருது
துணைவர்ஜீனத்
குடும்பத்தினர்
  • வீராவு (தந்தை)
  • பீவது (தாய்)

டி. வி. கொச்சுபாவ (T. V. Kochubava, 1955–1999) என்பவர் ஒரு மலையாள எழுத்தாளர் ஆவார். இவர் புதினங்களுக்கும், சிறுகதைகளுக்கும் பெயர் பெற்றவர். புதினங்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நாடகங்கள் ஆகியவை உள்ளடக்கிய இருபத்தி மூன்று புத்தகங்களை இவர் வெளியிட்டுள்ளார். மேலும் 1996 ஆம் ஆண்டு புதினத்துக்கான கேரள சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

கொச்சுபாவ கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில், வீராவு என்ற தென்னை நார் வணிகருக்கும், அவரது மனைவி பீவதுவுக்கும் மகனாக, 1955 நவம்பர் 28 அன்று பிறந்தார்.[1] கரஞ்சிராவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கான்வென்ட் பள்ளியிலும், காட்டூரில் உள்ள பாம்பே செயிண்ட் மேரி உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் நாட்டிக்காவில் உள்ள ஸ்ரீ நாராயணா கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, சார்ஜாவிற்குச் சென்று அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.[2] இந்தியா திரும்பியதும், இவர் கல்ஃப் வாய்ஸ் இதழின் ஆசிரியராக இணைந்து, கோழிக்கோட்டில் குடியேறினார்.[1]

கொச்சுபாவா ஜீனத்தை மணந்தார், இந்த இணையருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவர் 1999 நவம்பர் 25 அன்று தனது 43 வயதில் மாரடைப்பால் இறந்தார்.[1]

மரபும் கௌரவங்களும்

[தொகு]

இவர் நாடகம், புதினம், சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 23 நூல்களை எழுதியுள்ளார்.[3] கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற புதினமான விருதாசதனம், எப்போஜெதுமோ எந்தோ மற்றும் பிரார்த்தனைகளுடன் நிற்குன்னு போன்ற சிறுகதைத் தொகுப்புகள், செக்குடன் கைது, என்ற நாடகம் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.[4] இவர் பலூன் என்ற திரைக்கதையையும் எழுதினார். அது 1981 ஆம் ஆண்டு நானா பிலிம் வீக்லி நடத்திய திரைக்கதைப் போட்டியில் முதல் பரிசை வென்றது.[1] இது அடுத்த ஆண்டு அதே பெயரில் திரைப்படமாக எடுக்கபட்டது, அதில் முகேஷ் நடிகராக அறிமுகமானார்.[5] இவரது சிறுகதைத் தொகுப்பான ஜலமாலிகா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.ஏ மலையாளப் படிப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டது.[6]

1989 ஆம் ஆண்டு கொச்சுபாவ தனது "சூச்சிக்குழாயில் ஒரு யாக்கோப்" என்ற நூலுக்காக அங்கனம் விருதைப் பெற்றார், இந்த புத்தகம் அடுத்த ஆண்டு திருவாங்கூர் ஸ்டேட் வங்கி இலக்கிய விருதையும் பெற்றது.[2] 1995 ஆம் ஆண்டில் இவர் தனது "விருதாசதனம்" புதினத்துக்காக " செருகாடு விருதையும் பெற்றார்;[7] கேரள சாகித்ய அகாடமியும் 1996 ஆம் ஆண்டில் இந்த புதினத்தை தன் வருடாந்திர விருதுக்குத் தேர்ந்தெடுத்தது.[8] 1997 ஆம் ஆண்டில் இவர் தனது "உபஜன்மம்" புதினத்துக்காக தோப்பில் ரவி விருதையும், "ஜலமாலிகா" என்ற தொகுப்பிற்காக வி.பி. சிவகுமார் கேளி விருதையும் பெற்றார்.[2]

மலையாள இலக்கியத்தில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிப்பதற்காக, டிவி கொச்சுபாவ இலக்கிய விருது இவரது நினைவாக இவரது பெயரில் நிறுவப்பட்ட ஒரு விருது ஆகும். இந்த விருதை அக்பர் கக்கட்டில்,[9] சந்தீப் பம்பள்ளி [10] , கே. ரேகா ஆகியோர் ஆகியோர் பெற்றுள்ளனர்.[11] கொச்சுபாவவின் எழுத்தாளர் நண்பரான பாலச்சந்திரன் வடக்கேடத், 2014 இல் ஜன்மாஸ்ரதம் என்ற புத்தகத்தை வெளியிட்டார், அதில் இவரது வாழ்க்கை வரலாறு மற்றும் இவரது படைப்புகள் பற்றிய திறனாய்வு இடம்பெற்றுள்ளது.[3] கொச்சுபாவா பற்றிய மற்றொரு புத்தகத்தை கொச்சுபாவா கதையும் காலமும் என்ற தலைப்பில் வடக்கேடத் வெளியிட்டார்.[12]

நூல் பட்டியல்

[தொகு]

புதினங்கள்

[தொகு]
  • Kochubava, T. V. (1982). Onnangane Onningane. Irinjalakkuda: Samsaram publication.
  • Kochubava, T. V. (1990). Kalikalkkum pookkalkkum.
  • Kochubava, T. V. (1992). Irachiyum kunthirikkavum. Kollam, Imprint.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Kochubava, T. V. (1992). Prachannam. Kottayam, DCB.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Kochubava, T. V. (1993). Kinarukal. Kasaragode, Kalakshethram.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Kochubava, T. V. (1994). Praarthanakalote nilkkunnu. Kottayam: D. C. Books.
  • Kochubava, T. V. (1994). Grihapaadham. Kozhikode, Aksharam publications.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Kochubava, T. V. (1995). Katha. Kottayam, Current.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Kochubava, T. V. (1996). Snaanam. Kozhikode, Poorna.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Kochubava, T. V. (1997). Avathaarika bhoopadangalkku. Kottayam, DCB.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Kochubava, T. V. (1997). Jalamalika.
  • Kochubava, T. V. (1999). Eppozhethumo entho ?. Thrissur: Current Books.
  • Kochubava, T. V. (1999). Kathayum jeevithavum onnayi theerunnathineppatti. Kottayam: D. C. Books.
  • Kochubava, T. V. (1999). Villanmaar samsaarikkumpol. Kottayam, D C Books. ISBN 9788126400584.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Kochubava, T. V. (2002). Bhoomishasthram. Kottayam: D. C. Books. ISBN 9788126405459.
  • Kochubava, T. V. (2006). Kochubavayute kochu kathakal. Kozhikode: Poorna. ISBN 9788130003610.
  • Kochubava, T. V (2006). Vrddhapuraanam: kathakal. Thrissur, Green Books. ISBN 9788184230192.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  • Kochubava, T. V. (2013). Veedippol nishabdhamanu. Kozhikode: Lead Books.

சிறுகதைகள்

[தொகு]

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-03-24. Retrieved 2019-03-24.
  2. 2.0 2.1 2.2 Our RAK Correspondent, Williams George. "Malayalam novelist remembered". Khaleej Times. Retrieved 2019-03-24. {{cite web}}: |last= has generic name (help)
  3. 3.0 3.1 Santhosh, K. (2014-09-30). "Literary dissection of a friendship". The Hindu (in Indian English). Retrieved 2019-03-25.
  4. "List of works". Kerala Sahitya Akademi. 2019-03-25.
  5. "Balloon (1982)". www.malayalachalachithram.com. Retrieved 2019-03-25.
  6. "SYLLABUS FOR B.Com, B.A. / B.Sc.. FOUNDATION COURSE AND B.A.MALAYALAM" (PDF). UNIVERSITY OF PONDICHERRY U.G. BOARD (MALAYALAM). 2019-03-25. p. 14. Retrieved 2019-03-25.
  7. "Cherukad Award". keralaculture.org. 2019-03-24. Retrieved 2019-03-24.
  8. "Kerala Sahitya Akademi Award for Novel". Kerala Sahitya Akademi. 2019-03-25. Retrieved 2019-03-25.
  9. "Litterateur Akbar Kakkattil no more". Mathrubhumi (in ஆங்கிலம்). 17 February 2016. Retrieved 2019-03-25.
  10. "Sandeep Pampally". Issuu (in ஆங்கிலம்). Retrieved 2019-03-25.
  11. "ടി വി കൊച്ചുബാവ പുരസ്‌കാരം കെ രേഖയ്ക്കു സമ്മാനിച്ചു". www.kairalinewsonline.com. Retrieved 2019-03-25.
  12. Vadakkedath, Balachandran (2019-03-25). Kochubhava Kathayum Kaalavum. Green Books Publisher. ISBN 978-8184233537.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._கொச்சுபாவ&oldid=4361223" இலிருந்து மீள்விக்கப்பட்டது