உள்ளடக்கத்துக்குச் செல்

டி. பி. விஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. பி. விஜேந்திரன்
D.P Vinjandran
மலேசிய மக்களவை
துணைத்தலைவர்
பதவியில்
8 அக்டோபர் 1986 – 23 பிப்ரவரி 1990
காப்பார் மக்களவைத் தொகுதி
பதவியில்
1986–1990
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர் எம். மகாலிங்கம்
பெரும்பான்மை12,241 (1986)
மலேசிய இந்தியர் காங்கிரசு
பொதுச் செயலாளர்
பதவியில்
1984–1990[1]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புP. Bijandran (D.P Vijandran) a/l Pantanathan
ஈப்போ
அரசியல் கட்சி மஇகா
பிற அரசியல்
தொடர்புகள்
பாரிசான் நேசனல்
கல்விஈப்போ அன்டர்சன் பள்ளி
முன்னாள் மாணவர்சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி
தொழில்வழக்கறிஞர்

டி. பி. விஜேந்திரன் எனும் பிஜேந்திரன் பந்தனாதன் (ஆங்கிலம்; மலாய்: D.P Vinjandran அல்லது P. Bijandran (D.P Vijandran) Pantanathan) என்பவர் மலேசிய அரசியல்வாதி, 8 அக்டோபர் 1986 முதல் 23 பிப்ரவரி 1990 வரை மலேசிய மக்களவை துணைத் தலைவர்; 1986 முதல் 1990 வரை காப்பார் மக்களவைத் தொகுதி உறுப்பினர்; பதவிகளை வகித்தவர் ஆவார். இவர் 1984 முதல் 1990 வரை மஇகாவின் தேசிய பொதுச் செயலாளர் பதவியையும் வகித்துள்ளார்.

1978-ஆம் ஆண்டில் கெர்லிங் மகா மாரியம்மன் ஆலயத்தின் சிலைகள்; சமயத் தீவிரவாதிகள் சிலரால் உடைக்கப்பட்ட போது, அந்தக் கோயிலில் காவலில் இருந்த இந்தியர் இளைஞர்கள் சிலர்; சிலை உடைப்புகளில் ஈடுபட்ட ஐவரைக் கொன்றனர். கெர்லிங் நிகழ்ச்சி (Kerling Incident) என பரவலாக அறியப்படும் இந்த நிகழ்வு பன்னாட்டு அளவில் உணரப்பட்டது.[2] பாதிக்கப்பட்ட அந்த இளைஞர்களின் சார்பில் வழக்காடிய வழக்கறிஞர் டி. பி. விஜேந்திரன் என்றும் அறியப்படுகிறார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1986-ஆம் ஆண்டில் மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைத் துணைத் தலைவராக (Deputy Speaker of the Dewan Rakyat) பதவி வகித்தார். இந்தப் பதவியை வகித்த முதல் மலேசிய இந்தியர் இவரே ஆவார்.

1988-89 காலகட்டத்தில் இவர் மீது பாலுணர்வு காணொளி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் கர்பால் சிங் நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். இதனால் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூக நெருக்குதல்கள் காரணமாக, டி. பி. விஜேந்திரன் தனது மக்களவைத் துணைத் தலைவர் பதவியைத் துறப்பு செய்தார். 1990 சனவரி மாதம் அவர் மஇகா பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக டத்தோ ஜி. வடிவேலு புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்

பின்னர் போதிய சான்றுகள் இல்லாததால் நீதிமன்றத்தால் அக்குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதன் நீட்சியில் 1990 பொதுத்தேர்தலில் டி. பி. விஜேந்திரன் போட்டியிடவில்லை

வாழ்க்கை

[தொகு]

அரசியலில் இருந்து விலகிய பிறகு அவர் தொடர்ந்து ஒரு வழக்கறிஞராகச் செயல்பட்டார். மலேசியாவின் தற்போதைய முக்கியத் தமிழ் அரசியல்வாதியான டத்தோ செரி மு. சரவணன் அவர்களின் தொடக்க காலத்தில், மஇகாவின் மைக்கா ஓல்டிங்ஸ் (Maika Holdings) நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கு டி. பி. விஜேந்திரன் உதவி புரிந்துள்ளார் என்றும் அறியப்படுகிறது.

1970-களின் இறுதியில் மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கெர்லிங் கோயில் நிகழ்வில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களுக்காக இவர் வழக்காடினார்.

2010-ஆம் ஆண்டில் மலேசியாவை உலுக்கிய அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு அதிபர் டத்தோ சொசிலாவதி லவியா (Sosilawati Lawiya) கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபருக்கு ஆதரவாக டி. பி. விஜேந்திரன் வாதாடினார்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
காப்பார் மக்களவைத் தொகுதி 1986[3][4]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % எதிரணி வாக்குகள் % மொத்த
வாக்குகள்
பெரும்
பான்மை
%
2008 P.086 காப்பார் டி. பி. விஜேந்திரன் (மஇகா) 20,938 70.7% அசீஸ் பின் அம்சா (பாஸ்) 8,697 29.3% 30,592 12,241 41.3%

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Blowing the lid It's a scandal the likes of which has never hit the staid Indian community in Malaysia.". India Today. Retrieved 16 May 2026.
  2. ↑ "Anger over Malaysia temple razings: The so-called 1978 Kerling incident saw Hindu devotees killing a group of five conservative Muslims who were caught desecrating a temple". www.aljazeera.com (in ஆங்கிலம்). Retrieved 12 May 2023.
  3. ↑ "Election Result: P.086 Kapar; GE-0702 Aug 1986". electiondata.my. Retrieved 21 May 2026.
  4. ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._விஜேந்திரன்&oldid=4556508" இலிருந்து மீள்விக்கப்பட்டது