டி. ஜே. பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. ஜே. பாண்டியன் (Thavamani Jegajothivel Pandian பிறப்பு: 1939) ஒரு இந்திய அறிவியலாளர்.[1] நடுவணரசால் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தால், தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 பேராசிரியர்களில் ஒருவர். நாட்டில் அழிந்துவரும் சில மீனினங்களைப் பாதுகாப்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டவர். அப்போது இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரே அறிவியலாளர் இவர் மட்டுமே.

வாழ்வும் கல்வியும்[தொகு]

மதுரை அருகேயுள்ள பாலமேடு சிற்றூரில் இவர் பிறந்தார். பாலமேடு துவக்கப் பள்ளியிலும், மதுரை ஐக்கிய கிருத்துவ உயர்நிலைப் பள்ளியிலும் படித்தவர். மதுரை தியாகராசர் கல்லூரியில் பி.எஸ் சி. (விலங்கியல்) பட்டம், சென்னை மாநிலக் கல்லூரியில் எம். எஸ். சி. பட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்திலும், ஜெர்மனியில் உள்ள கெய்ல் பல்கலைக்கழகத்திலலும் முணைவர் பட்டங்கள்.

பணிகள்[தொகு]

மத்திய மீன்வள ஆய்வு மையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர். பிலிபென்ஸ்-சின் மணிலாவில் உள்ள ஆசிய மீன்வள அமைப்பின் உறுப்பினர். எனப் பல்வேறு அமைப்புகளிலும் பல பல்கலைக்கழகங்களின் குழுக்களிளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். இதுவரை 180 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்பித்துள்ளார். 5 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இதில் ஒன்று நியூயார்க் அகாதெமி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. நேசனல் அகாதெமி ஆஃப் சயின்ஸ் (அலகாபாத்), இந்தியன் அகாதெமி ஆஃப் சயின்ஸ் (பெங்களூர்), தி இந்தியன் நேசனல் சயின்ஸ் அகாமெமி (புது தில்லி), நேசனல்அகாதெமி ஆஃப் அக்ரிகல்சர் சயின்ஸ், ஏசியன் ஃபிஷரிஸ் சொசைட்டி (பிலிப்பைன்ஸ்), ஆகிய அமைப்புகளாள் தேர்வுச் செய்யப்பட்டவர்.

விருதுகள்[தொகு]

  • சிறந்த அறிவியலாளர்களுக்கு வழங்கப்படும் பட்நாகர் விருது
  • ஹூக்கர் விருது
  • நாகா விருது
  • தமிழ்நாடு விஞ்ஞானி விருது
  • பஹல் நினைவு தங்கப்பதக்கம் [2]

குறிப்புகள்[தொகு]

  1. "Indian Fellow". www.insaindia.org. பார்க்கப்பட்ட நாள் 26 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்63
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஜே._பாண்டியன்&oldid=3214508" இலிருந்து மீள்விக்கப்பட்டது