டி. செல்வராஜ் (வைகுண்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

D.செல்வராஜ் இவர் ஊர்வசி செல்வராஜ் என்ற பெயரில் அறியப்படுகிறார்.இவர் துணை தலைவராக 1990 முதல் 1997 வரை இருந்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸில் உறுப்பினராக G.K மூப்பனார் தலைமையில் இணைந்தார். 2006 ஆம் ஆண்டு ஸ்ரீ வைகுண்டம் தொகுதியின் தமிழ்நாடு மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

   கருணாநிதி மற்றும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த அவையில் இவர் மதிப்புமிக்க சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

சொந்த வாழ்க்கை:

    செல்வராஜ் தூத்துக்குடி மாவட்ட்டத்தில் உள்ள மரந்தலை  கிராமத்தில் பிறந்தார். இவரை ஊர்வசி செல்வராஜ் என குறிபிடிகின்றனர். இவர் விலை குறைந்த பொருட்களையே விரும்பியதால் இப்பெயர் வழங்கப்பட்டது என அறியமுடிகிறது. ஊர்வசி என்பது மலிவு விலை துணி சோப் ஆகும்.
   இவர் மாரடைப்பு காரணமாக ஜூலை 5, 2009 ஆம் ஆண்டு காலமானார். அவருக்கு அப்பொழுது வயது 58. அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் .