டி. கே. பத்மினி
டி. கே. பத்மினி | |
|---|---|
| பிறப்பு | 12 மே 1940 காடஞ்சேரி, பொன்னானி, மலப்புறம், கேரளம், இந்தியா |
| இறப்பு | 11 மே 1969 (அகவை 28) |
| தேசியம் | |
| கல்வி | {{ubஏ. வி. உயர்நிலைப் பள்ளி, பொன்னானி|அரசு கவின்கலைக் கல்லூரி, சென்னை}} |
| அறியப்படுவது | ஓவியக் கலை |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
| வாழ்க்கைத் துணை | கே. தமோதரன் |
டி. கே. பத்மினி (T. K. Padmini) (12 மே 1940-11 மே 1969[1]) தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய ஓவியர் ஆவார். சென்னை, லலித் கலா அகாதமியிடமிருந்து பல விருதுகளைப் பெற்ற இவர், இந்தியாவின் முன்னணி பெண் ஓவியர்களில் ஒருவராக இருந்தார். இவரது ஓவியங்கள் தேசிய கலைக்கூடம், சென்னை, ஐதராபாத்தில் உள்ள சலார் ஜங் அருங்காட்சியகம் மற்றும் கேரள லலித் கலா அகாதமியின் தர்பார் மாளிகை கலைக் காட்சியகம் ஆகியவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவர் தனது 29வது வயதில் 1969 மே 11 அன்று இறந்து போனார்.
சுயசரிதை
[தொகு]பத்மினி 12 மே 1940 அன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவின் மலப்புறம் மாவட்டத்திலுள்ள பொன்னானி என்ற கடலோர நகரத்திற்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான கடஞ்சேரியில் ஒரு அரசு ஊழியரான கினாட்டிங்கரை தாமோதரன் நாயருக்கு பிறந்தார்.[2][3] கடஞ்சேரியில் உள்ள உள்ளூர் பள்ளியில் ஆரம்ப பள்ளிப்படிப்புக்குப் பிறகு, பொன்னானியில் உள்ள பாசெல் மிஷன் பள்ளியிலும், பின்னர் பொன்னானியில் ஏ. வி. உயர்நிலைப் பள்ளியிலும் தனது கல்வியை முடித்தார். இந்தக் காலகட்டத்தில்தான், பள்ளியில் பத்மினியின் கலை ஆசிரியர் கே. எல். தேவஸ்ஸி, கலைகளில் இவரது திறமையைக் கண்டறிந்தார். பத்மினியின் மாமா திவாகர மேனன் கவிஞர் இடச்சேரி கோவிந்தன் நாயர் மூலம் தேவஸ்ஸியின் கீழ் கலைப் படிப்பைத் தொடர வற்புறுத்தினார். 1956 ஆம் ஆண்டில் இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, புகழ்பெற்ற கலைஞரான நம்பூதிரியின் கீழ் கலைப் பயிற்சியைத் தொடர்ந்தார். அவர் எந்த ஊதியமும் பெற்றுக்கொள்ளாமல் இவருக்குக் கற்பித்தார்.[4]
1961 ஆம் ஆண்டில் சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்த பத்மினி எடச்சேரி, தேவன் மற்றும் அக்கிதம் நாராயணன் ஆகியோரின் உதவியுடன் 1965-இல் பட்டம் பெற்றார்.[3] இங்கு, அந்த நேரத்தில் முதல்வராக இருந்த கே. சி. எஸ். பணிக்கரின் கீழ் படிக்கவும் பத்மினிக்கு வாய்ப்பு கிடைத்தது.[2] பின்னர், 1966 இல் சென்னை, வித்யோதயா பெண்கள் பள்ளியில் கலை ஆசிரியராகச் சேர்ந்தார்.[5] சென்னை, ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியிலும் சிலகாலம் பணிபுரிந்துள்ளார். ஓவியரும் அரசு கவின்கலைக் கல்லூரியில் சக மாணவருமான கே. தாமோதரனுடன் பத்மினியின் திருமணம் மே 1968 இல் நடந்தது. 11 மே 1969 அன்று, பத்மினி தனது 29 வயதில், பிரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட சிக்கல்களால் இறந்தார்.[6] இதில் இவரது குழந்தையும் உயிர் பிழைக்கவில்லை.
கௌரவங்கள்
[தொகு]கேரளாவின் கோழிக்கோட்டில் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில் பத்மினியின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. மலையாள எழுத்தாளர் எம். வி. தேவன் இவரது இரண்டு கரி வரைபடங்களை இந்த நிகழ்வில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்தார்.[3] இவரது ஓவியங்களில் தனது சொந்த இடம், கிராமப்புற வாழ்க்கை மற்றும் கிராமப்புற மக்களின் நிலப்பரப்புகளை வரைந்தார்.[7] மும்பை, கொல்கத்தா, ஐதராபாத்து, பெங்களூர், கொச்சி மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்ற பல கண்காட்சிகளிலும் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தினார். இதில் 1968 இல் சென்னையில் நடைபெற்ற ஒன் மேன் ஷோ மற்றும் 1969 இல் புதுதில்லியில் நடைபெற்ற தேசிய கண்காட்சி ஆகியவைக் குறிப்பிடத்தக்கதாகும். பத்மினியின் எண்பத்தாறு ஓவியங்கள் கொச்சியில் உள்ள கேரள லலித் கலா அகாதமியின் தர்பார் ஹால் காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சில வரைபடங்கள் திருச்சூரிலுள்ள அகாதமியின் காப்பகங்களில் உள்ளன. இவரது ஓவியங்களில் சில சென்னை, தேசிய கலைக்கூடத்திலும், ஐதராபாத் சாலர் ஜங் அருங்காட்சியகத்திலும், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தனியார் சேகரிப்புகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பத்மினியின் கடைசி படைப்பான காற்றாடி போல பறக்கும் பெண் என்ற ஓவியம் கிரியேட்டிவ் கலைட் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் சென்னை பிரித்தானிய மன்றத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.[3]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]பத்மினி, 1963 ஆம் ஆண்டில் வளர்ச்சி என்ற ஓவியத்திற்காக சென்னையின் லலிதகலா அகாடமியிடமிருந்து சான்றிதழ் பெற்றார்.[5] இளம் ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் சங்கம் அவர்களின் வருடாந்திர விருதை 1965 ஆம் ஆண்டில் பெண்கள் என்ற இவரது ஓவியத்திற்காக பத்மினிக்கு வழங்கியது. 1967 ஆம் ஆண்டில் சென்னை, லலித் கலா அகாதமியிலிருந்து மேலும் இரண்டு விருதுகளைப் பெற்றார். கனவுநிலம் மற்றும் டான் என்ற ஓவியம் இவருக்கு விருதுகளைப் பெற்றுத்தந்தது.[4]
மலையாளநாடு வார இதழ் பத்மினியின் முதல் நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு பிரசுரத்தை வெளியிட்டது. கேரள லலிதகலா அகாதமி 2005 ஆம் ஆண்டில் டி. கே. பத்மினி, ஒரு மோனோகிராஃப் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டது.[8] இதில் கானாயி குஞ்ஞிராமனின் முன்னுரையும், பத்மினியின் தாய்வழி மாமாவும் வழிகாட்டியுமான டி. கே திவாகரன், பத்மினியின் கணவர் கே. தாமோதரன், கலைஞரின் வாழ்க்கையில் வழிகாட்டும் நபர்களில் ஒருவரான எடச்சேரி கோவிந்தன் நாயர் ஆகியோரின் நினைவுக் குறிப்புகளும் இடம்பெற்றன. தவிர பத்மினியின் 28 ஓவியங்களும் 8 வரைபடங்களின் வண்ண மறுஉருவாக்கமும் இடம்பெற்றன.[9] 2012 ஆம் ஆண்டில், கேரள அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, பட்டம் பரத்துன்ன பெண்குட்டி என்ற தலைப்பில் பத்மினியின் வாழ்க்கையைப் பற்றிய 30 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்தது.[10][11] வால்டர் டி க்ரூஸ் இயக்கிய இத்திரைப்படம் 2012 ஆம் ஆண்டில் சிறந்த ஆவணப்படத்திற்கான கேரள மாநில தொலைக்காட்சி விருது,[12] 2013 ஆம் ஆண்டில் சர்வதேச ஆவணப்படம் , கேரள குறும்பட விழாவின் சிறப்பு நடுவர் விருது, 2013 ஆம் ஆண்டில் பெண் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்பட விருது[13] ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றது. கேரள லலிதகலா அகாடமி இவரது பெயரில் டி. கே. பத்மினி புரஸ்காரம் என்ற வருடாந்திர விருதையும் நிறுவியுள்ளது.[14]
பிரபல ஊடகங்களில்
[தொகு]டி. கே. பத்மினி நினைவு அறக்கட்டளை என்ற பெயரிடப்பட்ட அமைப்பு, கலைஞரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பத்மினி என்ற வாழ்க்கை வரலாற்றைத் தயாரித்துள்ளது.[15][16] எழுத்தாளர் சுஸ்மேஷ் சந்திரோத் இயக்கிய[17] அறிமுகத் திரைப்படமான இதில் பத்மினியின் பாத்திரத்தில் அனுமோள் நடித்திருந்தார்.[18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mair, Edasseri Govindan. "'Our Padmini' translation". Artist T.K. Padmini (1940 - 1969). Retrieved 21 October 2017.
- ↑ 2.0 2.1 "T.K.Padmini, a memoir by Poet Edasseri Govindan Nair". www.edasseri.org. Retrieved 2019-03-14.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "T.K.Padmini, a memoir by T.K. Divakara Menon". www.edasseri.org. Retrieved 2019-03-14.
- ↑ 4.0 4.1 "Padmini". Kerala Women. Archived from the original on 21 December 2017. Retrieved 21 October 2017.
- ↑ 5.0 5.1 "T.K. Padmini, the artist with a feminine touch". www.edasseri.org. Retrieved 2019-03-14.
- ↑ Nagarajan, Saraswathy (2012-03-08). "Tracing an artistic journey" (in en-IN). https://www.thehindu.com/features/cinema/tracing-an-artistic-journey/article2974036.ece.
- ↑ "T.K.Padmini, a memoir by her husband K. Damodaran". www.edasseri.org. Retrieved 2019-03-14.
- ↑ "Publications - Kerala Lalithakala Akademi". lalithkala.org. Retrieved 2019-03-14.
- ↑ "Releasing of the book published by Kerala Lalithakala Akademi". www.edasseri.org. Retrieved 2019-03-14.
- ↑ "Memories revisited". The New Indian Express. 16 May 2012. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2012/mar/05/memories-revisited-346207.html.
- ↑ "Film on T K Padmini to be Released". The New Indian Express. 23 March 2012. Retrieved 2019-03-14.
- ↑ "Kerala State television awards for 2012 were distributed". Vinodadarshan. Retrieved 2019-03-14.
- ↑ W Media (2018-05-03). "Pattam Parathunna Penkutti - T K Padmini - documentary". YouTube. Retrieved 2019-03-14.
- ↑ "State Awards - Kerala Lalithakala Akademi". www.lalithkala.org. Retrieved 2019-03-14.
- ↑ "Padmini on IMDb". ஐ. எம். டி. பி இணையத்தளம். 2019-03-14. Retrieved 2019-03-14.
- ↑ "Anumol plays painter TK Padmini in biopic". Asianet News Network Pvt Ltd. Retrieved 2019-03-14.
- ↑ Biju C. P. (15 February 2012). "എഴുത്തിന്റെ സാഹസിക സഞ്ചാരങ്ങള്" (in ml). Mathrubhumi இம் மூலத்தில் இருந்து 22 July 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722171306/http://www.mathrubhumi.com/books/article/essays/1480/.
- ↑ "Anumol to portray artist Padmini in Susmesh Chandroth's debut directorial". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 8 July 2018. Retrieved 2019-03-14.
வெளி இணைப்புகள்
[தொகு]- asianetnews (2016-10-07). "T.K. Padmini (Artist) - Yathra 25 Sep 2016". YouTube. Archived from the original on 2021-12-13. Retrieved 2019-03-14.
- (2012).Pattam Parathunna Penkutti."full video"
- Anu Yathra (2018-10-17). "Padmini (movie trailer)". YouTube. Archived from the original on 2021-12-13. Retrieved 2019-03-14.
- "Artist T K Padmini's Life Story To Be Filmed". Dailymotion (in ஆங்கிலம்). Retrieved 2019-03-14.
- PADMINI The Movie (2018-03-10). "Making of the Movie - PADMINI". யூடியூப். Archived from the original on 2021-12-13. Retrieved 2019-03-14.