டி. கே. நல்லப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. கே. நல்லப்பன் (T. K. Nallappan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் சார்பாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளரான என். கே. பி. ஜகநாதனை விட 11, 667 வாக்குகள் அதிகம் பெற்று தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]இவர் 1986 முதல் 1991 வரை உள்ள காலகட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், 1996 முதல் 2006 வரை செல்லிபாளையம் பேரூராட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.[2] இவர் 26.07.2019 அன்று உடல்நலக்குறைவால் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1980 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU". ECI. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2019.
  2. "பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மரணம்". மாலை மலர். 26 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2019.
  3. "முன்னாள் எம்எல்ஏ காலமானார்". தினமலர். 26 சூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கே._நல்லப்பன்&oldid=2780854" இலிருந்து மீள்விக்கப்பட்டது