டி. குண்ணத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. குண்ணத்தூர், இந்தியாவின் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், டி. குண்ணத்தூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும். டி. குண்ணத்தூர் கிராமம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இதன் அஞ்சல் சுட்டு எண் 625708 ஆகும்.

அமைவிடம்[தொகு]

டி. குண்ணத்தூர், திருமங்கலம் - தே. கல்லுப்பட்டிச் செல்லும் நெடுஞ்சாலை மீது அமைந்துள்ளது. இது திருமங்கலத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும், தே. கல்லுப்பட்டியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.

தொழில்கள்[தொகு]

டி. குண்ணத்தூர் கிராமத்தில் ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. மேலும் தேவாங்கர் சமூகத்தினர் கைலி துணி நெய்வதற்கு ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் உள்ளது. கிராமத்தின் முக்கியத் தொழில் வேளாண்மை மற்றும் கைலி நெசவுத் தொழில்கள் ஆகும்.

கோவில்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Krishna Kondamal Regupathi Kondamal Kovil, T. Kunnathur[தொடர்பிழந்த இணைப்பு]
  2. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
  3. "ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோவில்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்". Archived from the original on 2021-01-30. பார்க்கப்பட்ட நாள் 2021-01-30.
  4. CM, Deputy CM to inaugurate ‘MGR-Jayalalithaa temple’ today
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._குண்ணத்தூர்&oldid=3539168" இலிருந்து மீள்விக்கப்பட்டது