டி. கல்பனா தேவி
டி. கல்பனா தேவி (T. Kalpana devi) என்பவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் எட்டாவது மக்களவையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]கல்பனா தேவி 1941ஆம் ஆண்டு சூலை 13ஆம் நாள் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள பத்லபெனுமரு என்ற கிராமத்தில் சல்லசானி வீர இராகவைய்யா என்பவரின் மகளாகப் பிறந்தார். இவர் தன்னுடைய மருத்துவக் கல்வியினை வாரங்கலில் உள்ள காகத்தீய மருத்துவக் கல்லூரியில் பயின்றார்.[1]
தொழில்
[தொகு]கல்பனா தேவி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்வதற்கு முன்பு அனம்கொண்டாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பயிற்சியாளராக இருந்தார்.[1] 1984 ஆம் ஆண்டு வாரங்கலில் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் போட்டியிட்ட கமலாவுதீன் அகமத் என்பவரை 8,456 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எட்டாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] அதன் பிறகு, நடந்த பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியியின் இராம சகாயம் சுரேந்தர் ரெட்டி என்பவரிடம் போட்டியிட்டு தோற்றார்.[3]
அதன் பிறகு, கல்பனா தேவி தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி இந்திய தேசியக் காங்கிரசு கட்சியில் இணைந்து 1998 , 1999ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தெலுங்கு தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அஸ்மீரா சந்துலால் மற்றும் பொதக்குந்தி வெங்கடேசுவரலு என்பவர்களுடன் போட்டியிட்டு முறையே 38.25% சதவீத வாக்குகளும், 44.74% சதவீத வாக்குகளையும் பெற்று தனது அரசியல் வாழ்வை நிலைநிறுத்திக் கொண்டார்.[3][4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]டி. நரசிம்மா ரெட்டி என்பவரை கல்பனா தேவி 10.07.1961 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[1] இவர் 29.05.2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவருடைய இறுதி சடங்குகள் வாரங்கலில் நடத்தப்பட்டன.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Members Bioprofile: Kalpana Devi, Dr. (Smt.) T." மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ "Statistical Report on the General Elections, 1984 to the Eighth Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 43. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ 3.0 3.1 "Warangal Partywise Comparison". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ Charya, KVVV (11 February 1998). "Warangal set to witness a triangular contest". இந்தியன் எக்சுபிரசு இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171201080749/http://expressindia.indianexpress.com/fe/daily/19980211/04255634.html. பார்த்த நாள்: 27 November 2017.
- ↑ "Ex-MP Kalpana Devi passes away". United News of India. 29 May 2016. http://www.uniindia.com/ex-mp-kalpana-devi-passes-away/other/news/500104.html. பார்த்த நாள்: 27 November 2017.