டி. எம். தசநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. எம். தசநாயக்க (Dassanayake Mudiyanselage Dassanayake, 29 ஏப்ரல் 1953 – 8 சனவரி 2008) இலங்கை, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசக் கட்டுமான அமைச்சரும் ஆவார்.

தாக்குதல்[தொகு]

கொழும்பின் புறநகரான ஜா-எலவில் 2008 சனவரி 8 அன்று இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவருடன் சென்ற 6 படையினர் உள்ளிட்ட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதல் ஜா-எலவில் உள்ள முன்னாள் சிங்கள நடிகை ருக்மணி தேவியின் சிலையினை அண்மித்த பகுதியில் முற்பகல் 10:45 மணிக்கு இடம்பெற்றது. இத்தாக்குதலில் படுகாயமடைந்த அமைச்சர் தசநாயக்க ராகமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் 12:30 மணிக்கு உயிரிழந்தார். இறக்கும் போது இவரது வயது 54 ஆகும். தொடர்ந்து அமைச்சரின் மெய்ப்பாதுகாவலரும், பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும், வாகன ஓட்டுநரும் உயிரிழந்தனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._தசநாயக்க&oldid=2468370" இலிருந்து மீள்விக்கப்பட்டது