டி. என். சிவஞானம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருநெல்வேலி நெல்லையப்ப சிவஞானம் பிள்ளை ( டி. என். சிவஞானம் பிள்ளை, ஏப்ரல் 1, 1861- 1936) ஒரு தமிழக அரசியல்வாதி, அரசு நிருவாகி மற்றும் வழக்கறிஞர். நீதிக்கட்சியை சேர்ந்த இவர் பனகல் அரசரின் இரண்டாவது அமைச்சரவையில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

சைவ வேளாள சாதியினைச் சேர்ந்த சிவஞானம் பிள்ளை, சென்னை கிருத்துவக் கல்லூரியில் படித்து 1882ம் ஆண்டு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பிரித்தானிய இந்தியாவின் குடியியல் பணித்துறைக்கு (இந்தியன் சிவில் செர்விஸ்) தேர்ந்தெடுக்கப்பட்டு துணை ஆட்சியராக சிறிது காலம் பணியாற்றினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் நீதிக்கட்சியில் இணைந்தார். 1919ல் திருநெல்வேலித் தொகுதியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1923-26 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Studdert-Kennedy, Gerald (1998). Providence and the Raj: Imperial Mission and Missionary Imperialism. SAGE Publications. பக். 80. ISBN 0761992774, ISBN 9780761992776. 
  2. F. Irschick, Eugene. Tamil Revivalism in the 1930s. Cre-A\year=1986. பக். 29. 
  3. Rajaraman, P. (1988). The Justice Party: A Historical Perspective, 1916-37. Poompozhil Publishers. பக். 217. 
  4. Ralhan, O. P.. Encyclopaedia of Political Parties. Anmol Publications Pvt. Ltd.. பக். 236.