தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டி. ஆர். பச்சமுத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
டி. ஆர். பச்சமுத்து
T R Pachamuthu-Milan-2009.jpg
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
மே 2019
பிரதமர் நரேந்திர மோதி
முன்னவர் ஆர். பி. மருதராஜா
தொகுதி பெரம்பலூர்
தனிநபர் தகவல்
பிறப்பு டி. ஆர். பச்சமுத்து
ஆகத்து 24, 1941 (1941-08-24) (அகவை 77)
ஆத்தூர், சேலம்
இருப்பிடம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணி இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் தலைவரும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும் வேந்தரும்

தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து (Thandavarayapuram Ramaswami Pachamuthu, பரவலாக டி. ஆர். பச்சமுத்து) எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.[1] இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் ஆவார். இவர் டாக்டர் பாரிவேந்தர் எனவும் அழைக்கப்படுகிறார். இந்திய ஜனநாயகக் கட்சி எனும் அரசியல் கட்சியினையும் நடத்தி வருகிறார்.[2]

கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள பச்சமுத்து[3][4] ஓர் சான்றுபெற்ற பட்டய பொறியாளரும் (Chartered engineer) ஆவார்.[3]

இவர் புதிய தலைமுறை இதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி, வேந்தர் டி.வி. மற்றும் எஸ். ஆர். எம் டிரான்ஸ்போர்ட் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், பெரம்பலூர் தொகுதியிலிருந்து, இந்திய ஜனநாயகக் கட்சி சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும், திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][6]

இவர் இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இதே தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, 2,38,887 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

விருதுகள்[தொகு]

பர்மிங்ஹாம் நகரப் பல்கலைக்கழகம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு இவர் ஆற்றியுள்ள சேவைக்காக பெப்ரவரி 19, 2010 இல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "SRM Awards Over Rs. 5 Crores in Scholarship to Its Students". Chennai Online. Chennai Interactive Business Services (10 April 2008). பார்த்த நாள் 20 February 2010.
  2. http://ijkparty.org/
  3. 3.0 3.1 TEE Award Ceremony(Microsoft Silverlight)[Streamed video].Birmingham:Birmingham City University.Retrieved on 20 February 2010.Event occurs at 00:50:00.
  4. "304 - Easwari Engineering College". WorldColleges (2005). பார்த்த நாள் 20 February 2010.
  5. "பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வெற்றி". மாலைமலர் (மே 24, 2019)
  6. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்". பிபிசி தமிழ் (மே 23, 2019)
  7. "Honour for SRM Chancellor". WebIndia123. Suni Systems (20 February 2010). பார்த்த நாள் 20 February 2010.