டிஸ்னிலாண்ட், லாஸ் ஏஞ்சலஸ்
உறங்கும் அழகு காவல் கோட்டை, டிஸ்னிலாந்தின் சின்னம் | |
| அமைவிடம் | டிஸ்னிலாண்ட் விடுமுறை ஓய்வகம், அனாஹெய்ம், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
|---|---|
| கருப்பொருள் | மாயஜால இராச்சியம் |
| உரிமையாளர் | வால்ட் டிஸ்னி நிறுவனம் |
| திறப்பு | 17 சூலை 1955 |
| இணையத்தளம் | Disneyland Resort Homepage |
டிஸ்னிலாண்ட் பூங்கா (Disneyland Park), ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்தின் அருகில் உள்ள அனாஹெய்ம் பகுதியில் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் நிறுவனர் வால்ட் டிஸ்னி என்பவர் 17 சூலை 1955 அன்று நிறுவிய கேளிக்கைப் பூங்கா ஆகும். இப்பூங்காவில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியோர்களுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள், மாயாஜாலக் காட்சிகளைக் கொண்டது. [1][2]டிஸ்னிலாந்தில் வால்ட் டிஸ்னியால் கண்டுபிடிக்கப்பட்ட மிக்கி மவுஸ் படங்கள் மிகவும் பிரபலமானது. 17 சூலை 2025 அன்று டிஸ்னிலாந்து தனது 70வது ஆண்டு விழாவை கொண்டாடியது.[3] டிஸ்னிலேண்ட் "பூமியின் மகிழ்ச்சியான இடம்" என்று அழைக்கப்படுகிறது.
2001ஆம் ஆண்டில் டிஸ்னிலாந்தில் டிஸ்னிலாண்ட் பூங்காவில் தங்கும் விடுதிகள், 3 உணவு விடுதிகள், வணிக வளாகம் மற்றும் டிஸ்னி நகரம்[4]மற்றும் டிஸ்னி சாகச விளையாட்டுகள்[5] நிறுவப்பட்டது. தற்போது இப்பகுதியை தற்போது டிஸ்னிலாந்து தங்கு மகிழ்விடம் (Resort) ஆக [6]மாற்றியுள்ளனர்.
டிஸ்னிலாந்து பூங்கா, அதன் விருந்தினர்கள் தங்கள் வருகையை அனுபவிக்க பல வழிகளை வழங்குகிறது. எடுத்துக்காட்டாக பூங்காவிற்குச் செல்லும்போது, விருந்தினர்கள் ஒவ்வொரு சவாரியிலும் மற்றும் தங்குமிடங்கள் முழுவதும் மறைக்கப்பட்ட மிக்கி மவுஸ்களை காணலாம். அவைகள் மிக்கி மவுசின் தலை மற்றும் காதுகளின் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவைகள் பல்வேறு வடிவங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மிக்கி & பிரண்ட்ஸ் பூங்காவின் கட்டமைப்பில் உள்ள டெய்சி லெவலின் தரையில் மறைக்கப்பட்ட மிக்கி வடிவ சிமென்ட் அல்லது டுமாரோலேண்டில் உள்ள ஸ்பேஸ் மவுண்டன் சவாரியில் மிக்கி மவுஸின் தலையை உருவாக்கும் வட்ட வடிவத்தில் மூன்று ஒலி பெருக்கிகள் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட மிக்கிகள் விருந்தினர்களுக்கு பூங்கா முழுவதும் மாயாஜாலத்தைக் கண்டறிய ஒரு அற்புதமான வழியை வழங்குகிறது.
டிஸ்னிலாண்ட் பூங்கா பகுதிகள்
[தொகு]டிஸ்னிலாண்ட் பூங்கா பல பகுதிகளைக் கொண்டது. இதன் ஒவ்வொரு பகுதியும் அதன் சொந்த கருப்பொருள் கொண்டுள்ளது. அப்பகுதிகளின் பட்டியல் மற்றும் அவற்றின் கருத்துருக்கள் பின்வருமாறு:
முதன்மை வீதி
[தொகு]டிஸ்னிலாண்ட் பூங்காவின் நுழைவாயிலுக்கு முன்புறப் பகுதியே அமெரிக்காவின் முதன்மை வீதி ஆகும். இது அமெரிக்காவின் ஒரு சிறு நகரம் போன்று நிறுவப்பட்டுள்ளது. இப்பகுதியில் பலதரப்பட்ட கடை வீதிகள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளது. இங்கிருந்து பயனர்கள் டிஸ்னிலாந்து பூங்காவிற்கு செல்வதற்கான தொடருந்து நிலையம் உள்ளது.[7]இந்த தொடருந்து மூலம் டிஸ்னிலாந்து பூங்கா முழுவதும் சுற்றிப் பார்க்கலாம். முதன்மை வீதியைச் சுற்றிப் பார்க்க குதிரை வண்டிகள், இரண்டடுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கற்பனை நிலம்
[தொகு]டிஸ்னிலாந்து பூங்காவின் முகப்பில் பழைய விசித்திரக் கதைகளில் வரும் இடங்கள் காட்சி அளிக்கிறது. அவைகளில் குறிப்பிடத்தக்கது தூங்கும் அழகி, காவல் கோட்டை, டிஸ்னிலாந்தின் சின்னம் ஆகும். பூங்காவிற்கு உள்ளே பனிச்சறுக்கு சாகச விளையாட்டுகள் மற்றும் டிஸ்னிலாந்தின் சிறு உலகம் உள்ளது[8]. மேலும் ஆலிசு இன் வொண்டர்லாண்ட் பார்வையாளர்களைக் கவர்ந்து இழுக்கும். இங்குள்ள உலகின் முதல் ரோலர் கோஸ்டர் விளையாட்டு உலகப் புகழ் பெற்ற்து. இங்குள்ள பீட்டர் பான் விமானத்தில் இலண்டன் மீது பயணிக்கும் அனுபவத்தையும் மற்றும் கடற்கொள்ளையர் கப்பலில் பயணித்து நெதர்லாந்தை ஆராயும் அனுபவத்தையும் பெறலாம். பினோச்சியோவின் டேரிங் ஜர்னி என்பது பினோச்சியோ டிஸ்னி திரைப்படத்தின் கதையை ஆராய சவாரி செய்பவர்களை அனுமதிக்கும் மற்றொரு சவாரி ஆகும். ஸ்டோரிபுக் லேண்ட் கால்வாய் படகுகளில் கிளாசிக் டிஸ்னி கதைகளின் வெவ்வேறு சிறிய கிராமங்களை விருந்தினர்கள் பார்க்கலாம். பினோச்சியா கதைகளில் வரும் விளையாட்டு சாகசங்களை அனுபவிக்கலாம்.
சாகச விளையாட்டு நிலம்
[தொகு]ஆப்பிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் காணப்படும் அடர்ந்த காடுகள் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. இக்காடுகளுக்கு இடையே ஓடும் ஆற்றில் படகில் சவாரி செய்யலாம். இண்டியானா ஜோன்ஸ் ஜீப் சவாரியில் குகைகள், பெரிய பாம்புகளை மற்றும் பயங்கரமான காட்சிகளைக் காணலாம்.
எல்லைப்புற நிலம்
[தொகு]பழைய மேற்கு அமெரிக்காவைப் போன்ற காட்சியளிக்கும் நிலமாகும். இங்கு அமெரிக்க ஆறுகளில் படகுச் சவாரி செய்து பொழுது போக்கலாம்.
நாளைய நிலம்
[தொகு]எதிர்கால உலகம் எவ்வாறு இருக்கும் என்பதை காட்சிப்படுத்தும் பகுதியாகும். இங்கு வான் மலைகள், உள்ளரங்க ரோலர் கோஸ்டர் சவாரி, நீர் மூழ்கி கப்பல் பயணத்தில் பைண்டிங் நீமோ கதாபாத்திரங்களைக் காண வசதிகள் உள்ளது. [9]
மிக்கியின் டூன்டவுன்
[தொகு]மிக்கியின் டூன்டவுனில் மிக்கி மவுஸ் மற்றும் அதன் நண்பர்களை காணலாம்.
நியூ ஓர்லியன்ஸ் சதுக்கம்
[தொகு]நியூ ஓர்லியன்ஸ் சதுக்கத்தில் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் மற்றும் பேய் மாளிகையைக் காணலம்
ஸ்டார் வார்ஸ்:காலக்சி எட்ஜ்
[தொகு]ஸ்டார் வார்ஸ்:காலக்சி எட்ஜ் சாகச சவாரி விளையாட்டு டிஸ்னி பூங்காவில் 31 மே 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Disneyland Opening. Justdisney.com. Retrieved on September 6, 2013.
- ↑ Koening, David (2006). Mouse Tales: A Behind the ears look at Disneyland. Bona Venture Press. ISBN 0-9640605-6-6.
- ↑ Bob Iger reflects on Walt Disney's vision as Disneyland turns 70
- ↑ Downtown Disney
- ↑ Disney California Adventure
- ↑ [https://en.wikipedia.org/wiki/Disneyland_Resort Disneyland Resort
- ↑ Disneyland Railroad
- ↑ [https://en.wikipedia.org/wiki/It%27s_a_Small_World It's a Small World
- ↑ Finding Nemo Submarine Voyage
இணையதளம்
[தொகு]- Disneyland Resort Official website
