உள்ளடக்கத்துக்குச் செல்

டிரை ஐதரசன் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரை ஐதரசன் ஆக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிரை ஐதரசன் மோனாக்சைடு, டிரை ஐதரசன் ஆக்சிசன்
இனங்காட்டிகள்
12168-76-2 N[[1]]
InChI
  • InChI=1S/H3O/h1H3
    Key: JEMMGECATLJXLJ-UHFFFAOYSA-N
  • InChI=1S/2H2O.H2/h2*1H2;1H
    Key: HPCCIZFARGGUQF-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 76541350
  • [OH3]
  • [HH].O.O
பண்புகள்
H3O
வாய்ப்பாட்டு எடை 19.02 g·mol−1
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

டிரை ஐதரசன் ஆக்சைடு (Trihydrogen oxide) என்பது H3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரசனும் ஆக்சிசனும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2] இந்த கருதுகோள் சேர்மம் நிலையற்ற ஐதரசன் பாலி ஆக்சைடுகளில் ஒன்றாக இருக்கும். இந்த சேர்மம் யுரேனசு மற்றும் நெப்டியூனின் மையப்பகுதிகளைச் சுற்றி ஒரு மெல்லிய உலோக திரவ அடுக்கை உருவாக்கக்கூடும் என்றும், இதுவே அவற்றின் காந்தப்புலங்களின் மூலமாக இருக்கலாம் என்றும் கருதுகோள் கூறப்படுகிறது.[3] கணக்கீடுகள் இந்த கோள்களின் ஆழமான உட்புற நிலைகளில் H3O திட, மீ அயனி மற்றும் திரவ உலோக நிலைகளில் நிலைத்தன்மையைக் குறிக்கின்றன.

தயாரிப்பு

[தொகு]

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, டிரை ஐதரசன் ஆக்சைடு பரிசோதனை ரீதியாகக் கண்டறியப்படவில்லை. இருப்பினும், காலிப்சோ என்ற படிக அமைப்பு முன்னறிவிப்பு முறையைப் பயன்படுத்தி, கணக்கீட்டு ரீதியாக இதன் இருப்பு கணிக்கப்பட்டுள்ளது.[4] இச்சேர்மமானது 450–600 கிகாபாசுக்கல் அழுத்த வரம்பிற்குள் நிலைப்புத்தன்மையுடன் இருக்கும் என்றும், பின்வரும் வேதிவினையின் மூலம் இதனை உருவாக்க இயலும் என்றும் கருதப்படுகிறது:

2H2O + H2 → 2H3O

இயற்பியல் பண்புகள்

[தொகு]

டிரை ஐதரசன் ஆக்சைடு ஓர் உண்மையான மூலக்கூறு டிரை-ஐதரசன் ஆக்சைடு சேர்மமாக கருதப்படுவதில்லை. மாறாக, ஒரு நீர் மூலக்கூறில் இருப்பதைப் போலவே, இதில் உள்ள ஒவ்வொரு ஆக்சிசன் அணுவும் இரண்டு ஐதரசன் அணுக்களுடன் மட்டுமே ஒரு வலிமையான சகப்பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளது. மேலும், நீர் மூலக்கூறுகளின் வலைப்பின்னலில் உள்ள இடைவெளிகளுக்குள் டை-ஐதரசன் மூலக்கூறுகள் செருகப்பட்டுள்ளன.[4] எனவே, அமைப்பியல் ரீதியாக இது ஒரு 2(H2O)·H2 என்ற விகிதவியல் சேர்க்கையாகும்.

600 கிகா பாசுக்கல் மற்றும் 7000 கெல்வின் வெப்பநிலையில், இச்சேர்மத்தின் அடர்த்தி 4.3 கி/செ.மீ³ என கணக்கிடப்பட்டுள்ளது. நிலையான அடர்த்தியில், பல்வேறு வெப்பநிலைகளுக்கான மூலக்கூறு இயக்கவியல் உருவகப்படுத்துதல்கள் மேற்கொள்ளப்பட்டன.[4]

1000 கெல்வின் வெப்பநிலையில், H3O ஒரு செஞ்சாய்சதுரப் படிகத் திண்மமாகும் (இடக்குழு Cmca).

1250 கெல்வின் வெப்பநிலையில், இந்தத் திண்மம் ஒரு மீ அயனி நிலைக்கு மாறுகிறது.

5250 கெல்வின் வெப்பநிலையில் இது திரவமாகிறது. மேலும் அந்தத் திரவமானது உலோகத்தைப் போன்ற மின் கடத்துத்திறனைக் கொண்டிருக்க வேண்டும்.

சூரியக் குடும்பம்

[தொகு]

யுரேனசு மற்றும் நெப்டியூன் இரண்டின் காந்தப்புலங்களும் சிறப்பு வாய்ந்தவை. மின் இருமுனையும் அச்சுச் சமச்சீரும் அற்றவை. போதுமான அளவு மெல்லிய கடத்தும் அடுக்கிற்குள் டைனமோ விளைவால் காந்தப்புலங்கள் உருவாக்கப்பட்டால் இந்த உண்மையை விளக்க முடியும். இருப்பினும், புலங்களின் தோற்றம் இன்னும் சிக்கலாகவே உள்ளது. ஏனெனில் இந்தக் கோள்களின் மையங்கள் திடமானவை. தடிமனான பனி உறைகள் இந்த விளைவை உருவாக்க போதுமான அளவு கடத்தும் திறன் அற்றவை.[5][6]

சுவாரசியம்

[தொகு]

ஐதரசன் பெராக்சைடு (H2O2), ஐதரசன் டை ஆக்சைடு (HO2) மற்றும் டிரை ஐதரசன் ஆக்சைடு (H3O) ஆகியவை ஒரு புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hydronium radical".
  2. Stuart, Sam (11 September 2013). Nomenclature of Inorganic Chemistry: Inorganic Chemistry Division Commission on Nomenclature of Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. ISBN 978-1-4832-8447-7. Retrieved 17 May 2023.
  3. Krämer, Katrina (9 March 2020). "Metallic trihydrogen oxide could explain ice giants' strange magnetic fields". Chemistry World (in ஆங்கிலம்). Retrieved 17 May 2023.
  4. 1 2 3 Huang, Peihao; Liu, Hanyu; Lv, Jian; Li, Quan; Long, Chunhong; Wang, Yanchao; Chen, Changfeng; Ma, Yanming (16 August 2019). "Metallic liquid H3O in a thin-shell zone inside Uranus and Neptune". arXiv:1908.05821 [physics.comp-ph].
  5. Stanley, Sabine; Bloxham, Jeremy (March 2004). "Convective-region geometry as the cause of Uranus' and Neptune's unusual magnetic fields" (in en). Nature 428 (6979): 151–153. doi:10.1038/nature02376. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:15014493. Bibcode: 2004Natur.428..151S. https://www.nature.com/articles/nature02376. பார்த்த நாள்: 17 May 2023.
  6. Stanley, Sabine; Bloxham, Jeremy (1 October 2006). "Numerical dynamo models of Uranus' and Neptune's magnetic fields" (in en). Icarus 184 (2): 556–572. doi:10.1016/j.icarus.2006.05.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-1035. Bibcode: 2006Icar..184..556S. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0019103506001680. பார்த்த நாள்: 17 May 2023.
  7. Steinberg, Paul (21 April 2015). A Salamander's Tale: My Story of Regeneration?Surviving 30 Years with Prostate Cancer (in ஆங்கிலம்). Simon & Schuster. ISBN 978-1-63220-953-5. Retrieved 17 May 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரை_ஐதரசன்_ஆக்சைடு&oldid=4524092" இலிருந்து மீள்விக்கப்பட்டது