டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலி
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலி
வேறு பெயர்கள்
2,2,2- டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலி
இனங்காட்டிகள்
407-25-0 Yes check.svgY
ChemSpider 21106178
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9845
பண்புகள்
C4F6O3
வாய்ப்பாட்டு எடை 210.03 g·mol−1
அடர்த்தி 1.487 கி/மி.லி
உருகுநிலை
கொதிநிலை 40 °C (104 °F; 313 K)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Oxford MSDS
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn); அரிக்கும் (C)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலி (Trifluoroacetic anhydride) என்பது C4F6O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரைபுளோரோ அசிட்டிக் அமிலத்தினுடைய அமில நீரிலியாகவும், அமிலநீரிலியின் பெர்புளோரினேற்ற வழிப்பொருளாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது. மற்ற அமிலநீரிலிகளைப் போல இச்சேர்மத்தையும் தொடர்புடைய டிரைபுளோரோ அசிட்டைல் குழுவை அறிமுகம் செய்யப் பயன்படுத்துகிறார்கள். இச்சேர்மத்தின் வழியில் தொடர்புடைய அசைல் குளோரைடும், டிரைபுளோரோ அசிட்டைல் குளோரைடும் வாயுக்களாகும். டிரைபுளோரோ அசிட்டிக் அமிலத்தின் ஈரமுறிஞ்சியாக டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலி பரிந்துரைக்கப்படுகிறது [1]

தயாரிப்பு[தொகு]

டிரைபுளோரோ அசிட்டிக் அமிலத்துடன் அதிகப்படியான ஆல்பா-ஆலசனேற்ற அமிலகுளோரைடுகளைச் சேர்த்து நீரிறக்கம் செய்வதன் மூலம் டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலியைத் தயாரிக்கமுடியும். டைகுளோரோ அசிட்டைல் குளோரைடை அமிலக் குளோரைடுக்கு உதாரணமாகக் கூறுவார்கள்  :[2]

2 CF3COOH + Cl2CHCOCl → (CF3CO)2O + Cl2CHCOOH + HCl

மேற்கோள்கள்[தொகு]