டிரைபுளோரோமெத்தில் ஐப்போபுளோரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரைபுளோரோமெத்தில் ஐப்போபுளோரைட்டு
Trifluoromethyl hypofluorite
இனங்காட்டிகள்
373-91-1 N
ChemSpider 71322
InChI
  • InChI=1S/CF4O/c2-1(3,4)6-5
    Key: SMBZJSVIKJMSFP-UHFFFAOYSA-N
  • InChI=1/CF4O/c2-1(3,4)6-5
    Key: SMBZJSVIKJMSFP-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 78989
SMILES
  • FC(F)(F)OF
பண்புகள்
OCF
4
வாய்ப்பாட்டு எடை 104.004012
தோற்றம் நிறமற்ற வாயு
உருகுநிலை −213 °C (−351.4 °F; 60.1 K)
கொதிநிலை −95 °C (−139 °F; 178 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N
Infobox references

டிரைபுளோரோமெத்தில் ஐப்போபுளோரைட்டு (Trifluoromethyl hypofluorite) என்பது OCF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இக்கரிமபுளோரின் சேர்மம் அறைவெப்ப நிலையில் நிரமற்ற வாயுவாகவும் உயர் நச்சுத்தன்மை கொண்டும் உள்ளது[1]. O-F பிணைப்பு உடைய ஐப்போபுளோரைட்டு சேர்மத்திற்கு இதை ஓர் அரிய உதாரணமாகக் கூறலாம். கார்பனோராக்சைடுடன் புளோரின் வாயுவைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் டிரைபுளோரோமெத்தில் ஐப்போபுளோரைட்டு உருவாகிறது.

2 F2 + CO → CF3OF

நடுநிலை pH இல் மட்டும் இவ்வாயு மெல்ல நீராற்பகுப்பு அடைகிறது.

கரிம வேதியியல் பயன்[தொகு]

எலக்ட்ரான்கவர் புளோரினுக்கு இச்சேர்மமே ஆதார மூலமாகும். சிலில் ஈனோல் ஈதர்களிலிருந்து α-புளோரோகீட்டோன்கள் தயாரிப்பதற்கு இச்சேர்மம் பயன்படுகிறது [2].

இச்சேர்மம் ஒரு போலி ஆலசனைப் போல செயல்பட்டு எத்திலீனுடன் சேர்ந்து ஈத்தரைக் கொடுக்கிறது.

CF3OF + CH2CH2 → CF3OCH2CH2F

மேற்கோள்கள்[தொகு]

  1. Cady, G (1966). "Trifluoromethyl Hypofluorite". Inorganic Syntheses 8: 168. doi:10.1002/9780470132395.ch43. 
  2. Middleton, W. J.; Bingham, E. M. (1980). "α-Fluorination of carbonyl compounds with trifluoromethyl hypo fluorite". Journal of the American Chemical Society 102: 4845–6. doi:10.1021/ja00534a053.