டிரைபுரோமோயெத்தனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2,2,2-டிரைபுரோமோயெத்தனால்
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் அவெர்டின்
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 75-80-9
ATC குறியீடு ?
பப்கெம் CID 6400
ChemSpider 6160
ஒத்தசொல்s டிரைபுரோமோயெத்தில் ஆல்ககால்
வேதியியல் தரவு
வாய்பாடு C2

H3 Br3 O  

இயற்பியல் தரவு
உருகு நிலை 73-79 °C (-37 °F) [1]
கொதி நிலை 92-93 °C (-43 °F) at 10 மி.மீ.பாதரசம்[1]

டிரைபுரோமோயெத்தனால் (Tribromoethanol) என்பது C2H3Br3O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு மயக்க மருந்தாகும். விலங்குகளை குறிப்பாக கொறிணிகளை அறுவைச் சிகிச்சைக்கு முன்னதாக மயங்கச் செய்ய இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [2]. மூவிணைய அமைல் ஆல்ககாலில் ஒரு கரைசலாக சேர்க்கப்பட்டு அவெர்ட்டின் என்ற வணிகப்பெயரில் இது சந்தைப்படுத்தப்படுகிறது [3]. விரைவாகவும் ஆழ்ந்த மயக்கத்திற்கு அழைத்துச் செல்லவும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அதே வேகத்தில் முழுமையாக மயக்கம் தெளியவும் டிரைபுரோமோயெத்தனால் பயனாகிறது [4].

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் டிரைபுரோமோயெத்தனால் பரவலாக மனிதர்களுக்கும் பொதுவாக ஒரு மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்தது[5] . காமா-அமினோபியூட்டைரிக் அமிலத்தையும், கிளைசீன் ஏற்பிகளையும் தடுக்கும் நேர்மறை மாற்றுத்தூண்டி பண்பேற்றியாக டிரைபுரோமோயெத்தனால் செயல்படுவதாக மின் உடலியங்கியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்புடைய 2,2,2-டிரைகுளோரோயெத்தனால் வழிமுறையைப் போன்ற ஒரு திட்டத்தை இங்கும் காணமுடிகிறது[6]. புரோமல் ஐதரேட்டு எனப்படும் 2,2,2-டிரைபுரோமோயெத்தனால்-1,1-டையால் என்ற சேர்மமும் ஓர் அங்கீகரிக்கப்பட்ட விலங்குகளுக்கான பொது மயக்கமருந்தாக கருதப்படுகிறது. இது வளர்சிதை மாற்றத்தினால் டிரைபுரோமோயெத்தனாலாக மாற்றப்பட்டு செயல்படுகிறது [7].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "2,2,2-Tribromoethanol". Sigma-Aldrich.
  2. "Tribromoethanol (Avertin)". Cold Spring Harbor Protocols. Cold Spring Harbor Laboratory.
  3. "Guidelines for the Use of Tribromoethanol/Avertin Anesthesia". National Cancer Institute.
  4. "Tribromoethanol (Avertin) as an anaesthetic in mice". Laboratory Animals 33: 192–193. 1999. http://lan.sagepub.com/content/33/2/192.full.pdf. 
  5. G Edwards (1945). "Tribromethyl alcohol (avertin, bromethol), 1928-1945". Proceedings of the Royal Society of Medicine 39: 71–76. பப்மெட்:21010258. 
  6. M.D. Krasowski & N.L. Harrison (2000). "The actions of ether, alcohol and alkane general anaesthetics on GABAA and glycine receptors and the effects of TM2 and TM3 mutations". British Journal of Pharmacology 129 (4): 731–743. doi:10.1038/sj.bjp.0703087. பப்மெட்:10683198. 
  7. Lehman G and Knoefel PK (1938). Trichloroethanol, tribromoethanol, chloral hydrate, and bromal hydrate. J Pharmacol Exp Ther, 63: 453-465.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைபுரோமோயெத்தனால்&oldid=2656950" இருந்து மீள்விக்கப்பட்டது