டிரைநைட்ரோ டிரையசீன்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
2,4,6-டிரைநைட்ரோ-1,3,5-டிரையசீன்
| |||
இனங்காட்டிகள் | |||
140218-59-3 | |||
ChemSpider | 15188373 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
| |||
பண்புகள் | |||
C3N6O6 | |||
வாய்ப்பாட்டு எடை | 216.07 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
டிரைநைட்ரோ டிரையசீன் (Trinitrotriazine) என்பது C3N6O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கோட்பாட்டு அடிப்படையிலான ஒரு வேதிப்பொருளாகக் கருதப்படும் இச்சேர்மம் 2,4,6-டிரைநைட்ரோ-1,3,5-டிரையசீன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. எளிய கட்டமைப்பை கொண்டிருந்தாலும் டிரைநைட்ரோ டிரையசீன் சேர்மத்தை தயாரிப்பது ஒரு சிக்கலான நடைமுறையாகவே உள்ளது [1][2]. பாரம்பரியத் தயாரிப்பு முறையான டிரையசீனை நைட்ரோயேற்றம் செய்யும் முறையில் அதிக அளவினான நைட்ரோ குழுக்கள் உடன் சேர்ந்து கிடைக்கின்றன. நைட்ரைல் சயனைடை முப்படியாக மாற்றும் தயாரிப்பு முறை ஒரு வெற்றிகரமான பாதையாகத் தொடரக்கூடும்[3]. முன்னோடி சேர்மமான நைட்ரைல் சயனைடு முதன்முதலில் ரகம் மற்றும் பலர் இணைந்து 2014 ஆம் ஆண்டில் தயாரித்தனர் [4].
டிரைநைட்ரோ டிரையசீன் ஒரு சரியான ஆக்சிசன் சமநிலையைக் கொண்டுள்ளது. இதனால் மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருளாக மாறும் திறன் கொண்டதாக உள்ளது. ஆனால் கணக்கீடுகள் இசேர்மம்த மிகவும் நிலைப்புத்தன்மை அற்றதாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றன. தொடர்புடைய சேர்மம் 3,6-டைநைட்ரோ-1,2,4,5-டெட்ராசீனை விட தாழ்ந்ததாக இருக்கும் என்றும் அவை கணிக்கின்றன[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ G. D. Hartman, R. D. Hartman and J. E. Schwering. Tetrahedron Letters. 1983; 24: 1011.
- ↑ M. D. Coburn, C. L. Coon, H. H. Hayden and A. R. Mitchell. Synthesis. 1986: 490.
- ↑ Korkin AA. Bartlett RJ. Theoretical Prediction of 2,4,6-Trinitro-1,3,5-triazine (TNTA). A New, Powerful, High-Energy Density Material? Journal of the American Chemical Society. 1996; 118: 12244-12245.
- ↑ Rahm, M., Bélanger-Chabot, G., Haiges, R. and Christe, K. O. (2014), Nitryl Cyanide, NCNO2. Angew. Chem. Int. Ed., 53: 6893–6897
- ↑ Jinshan Li. An Ab Initio Theoretical Study of 2,4,6-Trinitro-1,3,5-Triazine, 3,6-Dinitro-1,2,4,5-Tetrazine, and 2,5,8-Trinitro-Tri-s-Triazine. Propellants, Explosives, Pyrotechnics. December 2008; 33(6):443-447.