டிரைசுதலைட்டு
டிரைசுதலைட்டு Drysdallite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | MoSe1.5S0.5 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 230.41 கிராம் |
படிக அமைப்பு | அறுகோணம் ஈரறுகோண இருபட்டகம் |
பிளப்பு | சரிபிளவு |
விகுவுத் தன்மை | மெழுகு, நெகிழ்வான, பொடியாக்குவது கடினம் |
மோவின் அளவுகோல் வலிமை | 2 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | பழுப்பும் கருப்பும் |
ஒப்படர்த்தி | 6.248 (கணம்மிடப்பட்டது.) |
அடர்த்தி | 6.248 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது) |
பலதிசை வண்ணப்படிகமை | வலிமையானது, வெண்மை முதல் வெளிர் சாம்பல், இளஞ்சிவப்பு சாம்பல் வரை |
டிரைசுதலைட்டு (Drysdallite) என்பது Mo(Se,S)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய வகை கனிமமாகும். மாலிப்டினம் செலீனியம் சல்பைடு கனிமமாக இது வகைப்படுத்தபடுகிறது. அறுகோண அமைப்பில் சிறிய பட்டைக்கூம்புரு படிகங்களாக அல்லது பிளவுபடக்கூடிய பொதிகளாகப் படிகமாகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 1 முதல் 1.5 வரை மதிப்பிலான கடினத்தன்மையும் 6.25 என்ற ஒப்படர்த்தியும் கொண்டு ஓர் ஒளிபுகா உலோக கனிமமாக டிரைசுதலைட்டு திகழ்கிறது. மாலிப்டினைட்டைப் போலவே சரியான பிளவையும் கொண்டதாக உள்ளது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் Dry[1] என்ற குறியீட்டால் டிரைசுதலைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.
முதன்முதலில் 1973 ஆம் ஆண்டில் சாம்பியாவின் சோல்வேசிக்கு அருகில் ஓர் ஆக்சிசனேற்றப்பட்ட யுரேனியப் படிவுகளில் டிரைசுதலைட்டு காணப்பட்டது. சாம்பியன் புவியியல் ஆய்வு இயக்குனரான ஆலன் ராய் டிரைசுதால் நினைவாகக் கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.