டிரைகுளோரோமெத்தில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டிரைகுளோரோமெத்தில் (Trichloromethyl) என்பது –CCl3 .என்ற வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதி வினைக்குழுவாகும். இதை ஒரு மெத்தாக்சி குழு –O–CH3 என்று கருதலாம். மெத்தாக்சி குழுவிலுள்ள ஐதரசன் அணுக்கள் ஒவ்வொன்றும் குளோரின் அணுக்களால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டால் உருவாகும் குழு டிரைகுளோரோமெத்தில் எனப்படுகிறது. இக்குழுவைச் சேர்ந்த சேர்மங்கள் அனைத்தும் கரிம குளோரின் வகை சேர்மங்களின் துணைக்குழு சேர்மங்களாகக் கருதப்படுகின்றன. டிரைகுளோரோமெத்தேன் (H–CCl3) , 1,1,1-டிரைகுளோரோயீத்தேன் (H3C–CCl3), குளோரால் (HOC–CC) போன்றவை இவ்வகைச் சேர்மங்களுக்கு சில குறிப்பிடத்தக்க உதாரணங்களாகும்.

டிரைகுளோரோ அசிட்டிக் அமிலத்தின் HOOC–CCl3 அமிலக்காரத்தன்மை மாறிலியின் மதிப்பு 0.77 ஆகும். அசிட்டிக் அமிலத்தின் அமிலக்காரத்தன்மை மாறிலியின் மதிப்பு 4.76 என்பது குறிப்பிடத்தக்கது [1][2] .

இந்த காரணத்தினால் டிரைகுளோரோ மெத்தில் குழு கரிமச் சேர்மங்களின் காரத்தன்மையை குறைக்கிறது எனலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Trichloromethyl | CCl3 | ChemSpider". www.chemspider.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-26.
  2. "Trichloromethyl radical". webbook.nist.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைகுளோரோமெத்தில்&oldid=2578390" இலிருந்து மீள்விக்கப்பட்டது