டிரைகீட்டோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


குரோகோனிக் அமிலம் மூன்று C=O குழுக்களைக் கொண்டிருப்பதால் இதுவொரு டிரைகீட்டோன்

டிரைகீட்டோன் அல்லது டிரையோன் (Triketone or Trione) என்பது மூன்று கீட்டோன் வேதி வினைக்குழுக்களைக் கொண்டிருக்கும் ஒரு மூலக்கூறைக் குறிக்கும்.

வளையபுரோப்பேன்டிரையோன், பார்பிட்யூரிக் அமிலம், டிரையசீன் சயனூரிக் அமிலம் போன்றவை எளிய டிரைகீட்டோன்களாகும். குரோகோனிக் அமிலத்தில் ஐதராக்சி குழுக்கள் உள்ளன. நின்னைதரீனில் ஒரு கீட்டோன் குழு நீரேற்றப்பட்டிருக்கும்.

டிரையூரெட் உள்ளிட்ட நேரியல் டிரைகீட்டோன் சேர்மங்கள் அடுத்தடுத்த மூன்று கார்பனைல் குழுக்களுடன் மெசுவாக்சாலிக் அமிலம் மற்றும் டையாக்சோசக்சினிக் அமிலம் ஆகியனவற்ரைக் கொண்டுள்ளன. இவை டைகார்பாக்சிலிக் அமிலங்கள் எனவும் கீட்டோனிக் அமிலங்கள் என்றும்கூடக் கருதப்படுகின்றன. டைபீனைல்டிரைகீட்டோன், டைபீனைல்டெட்ராகீட்டோன் மற்றும் டிரைகீட்டோபென்டேன் உள்ளிட்ட டிரைகீட்டோன்கள் 1901 ஆம் ஆண்டுகளில் அறியப்பட்டவையாகும் [1].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sachs, Franz; Barschall, Hermann (May 1901). "Ueber das Triketopentan. I". Berichte der deutschen chemischen Gesellschaft 34 (2): 3047–3054. doi:10.1002/cber.190103402273. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரைகீட்டோன்&oldid=2391467" இலிருந்து மீள்விக்கப்பட்டது