டிரெஸ்-2பி
புறக்கோள் | புறக்கோள்களின் பட்டியல் | |
---|---|---|
![]() | ||
தாய் விண்மீன் | ||
விண்மீன் | ஜிஎஸ்சி 03549-02811 ஏ[1] | |
விண்மீன் தொகுதி | டிரேக்கோ | |
வலது ஏறுகை | (α) | 19h 07m 14.035s |
சாய்வு | (δ) | +49° 18′ 59.07″ |
தொலைவு | 750 ± 30 ஒஆ (230 ± 10 புடைநொடி) | |
அலைமாலை வகை | G0V | |
சுற்றுவட்ட இயல்புகள் | ||
அரைப் பேரச்சு | (a) | 0.03556 ± 0.00075[1] AU |
மையப்பிறழ்ச்சி | (e) | 0 |
சுற்றுக்காலம் | (P) | 2.47063 ± 1e-05 நா |
சாய்வு | (i) | 83.62 ± 0.14[1]° |
இருப்புசார்ந்த இயல்புகள் | ||
திணிவு | (m) | 1.199 ± 0.052[1] MJ |
ஆரை | (r) | 1.272 ± 0.041[1] RJ |
மேற்பரப்பு ஈர்ப்பு | (g) | 3.284 ± 0.016[1] g |
கண்டுபிடிப்பு | ||
கண்டறிந்த நாள் | ஆகத்து 21, 2006 2006 செப்டம்பர் 8 இல் உறுதிப்படுத்தப்பட்டது | |
கண்டுபிடிப்பாளர்(கள்) | ஓ'டொனவான், ஏனையோர். | |
கண்டுபிடித்த இடம் | கலிபோர்னியா, அரிசோனா | |
கண்டுபிடிப்பு நிலை | வெளியீடு | |
வேறு பெயர்கள் | ||
ட்ரெஸ்-2பி
| ||
Database references | ||
புறக்கோள்களின் கலைக்களஞ்சியம் | தரவு | |
SIMBAD | தரவு |
ட்ரெஸ்-2பி (TrES-2b) அல்லது கெப்லர்-1பி (Kepler-1b) என்பது 750 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஜிஎஸ்சி 03549-02811 என்ற விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோள் ஆகும். இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் இதுவே மிகவும் இருண்டது என 2011 ஆம் ஆண்டில் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்தது. இதன் மீது படும் சூரிய ஒளியில் 1 விழுக்காட்டினையே வெளியே தெறிக்கிறது[2]. இக்கோளின் திணிவு மற்றும் ஆரம் ஆகியவை இது வியாழனை ஒத்த ஒரு வளிமக் கோள் ஆக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனாலும், வியாழன் போலல்லாது, இக்கோள் தனது சூரியனில் இருந்து கிட்டிய அளவு தூரத்திலேயே அமைந்துள்ளது. இதனால் சூடான வியாழன் வகைக் கோள்களுடன் இதனை வகைப்படுத்துகின்றனர்[3].
கண்டுபிடிப்பு
[தொகு]
ட்ரெஸ்-2பி புறக்கோள் 2006 ஆம் ஆண்டு ஆகத்து 21 ஆம் நாள் ட்ரெஸ் (Trans-Atlantic Exoplanet Survey) என அழைக்கப்படும் டிரான்ஸ்-அத்திலாந்திக் புறக்கோள் ஆய்வு மையத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு பின்னர் அதே ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் கெக் அவதான நிலையத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது[1][3].
கெப்லர் திட்டம்
[தொகு]
புறக்கோள்களை ஆய்வு செய்வதற்காக 2009 மார்ச்சில் நாசா நிறுவனம் கெப்லர் விண்கலத்தை ஏவியது. ஏப்ரல் 2009 இல் இது தனது முதலாவது தொகுதி படங்களை அனுப்பியது. இவற்றில் ட்ரெஸ்-2பி குறித்த தகவலும் அடங்கியிருந்தன[4].
இருண்ட கோள்
[தொகு]ஆகத்து 2011 இல் ட்ரெஸ்-2பி பற்றிய முக்கிய தகவல்களை அது அனுப்பியது[2]. புறக்கோள்களில் மிகவும் இருண்ட கோள் இதுவாகும். நிலக்கரியை விட மிகக்குறைந்தலவு ஒளியையே வெளியேற்றுகிறது[5]. இக்கோள் அசாதாரணமாகக் கருப்பாக இருப்பது எதனால் என்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனாலும், ஆவியான நிலையில் சோடியம், மற்றும் பொட்டாசியம், வளிம நிலையில் டைட்டேனியம் ஒக்சைடு ஆகியன அதிக அளவில் காணப்படுகின்றன எனத் தெரிகிறது. இவை ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டவை[6].
இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. இது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. இதன் மேற்பரப்பில் பல வாயுக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[7].
சூரிய கதிர்களின் வெளிச்சம் இல்லை
[தொகு]வியாழன் கிரகத்தில் சூரியனின் வெளிச்சம் அதிக அளவில் விழுகிறது. அதனால் வெள்ளை மற்றும் சிவப்பு நிற மேகங்கள் படர்ந்திருப்பது தெரிகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ட்ரெஸ் 2 பி கிரகத்தில் சூரிய கதிர்களின் வெளிச்சம் விழாததால் அதுபோன்ற மேக மூட்டங்கள் படர்ந்திருப்பதை காண முடியவில்லை என விண்வெளி ஆராய்ச்சியாளர் டேவிட் கிப்பிங் தெரிவித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Daemgen et al. (2009). "Binarity of transit host stars - Implications for planetary parameters" (PDF). வானியலும் வானியற்பியலும் 498: 567–574. doi:10.1051/0004-6361/200810988. Bibcode: 2009A&A...498..567D. http://www.mpia.de/homes/henning/Publications/daemgen.pdf.
- ↑ 2.0 2.1 David M. Kipping et al.. "Detection of visible light from the darkest world". Monthly Notices of the Royal Astronomical Society. http://www.astro.princeton.edu/~dsp/PrincetonSite/Home_files/darkest_world.pdf. பார்த்த நாள்: 2011-08-12.
- ↑ 3.0 3.1 O'Donovan et al. (2006). "TrES-2: The First Transiting Planet in the Kepler Field". The Astrophysical Journal Letters 651 (1): L61–L64. doi:10.1086/509123. Bibcode: 2006ApJ...651L..61O. http://www.iop.org/EJ/article/1538-4357/651/1/L61/21047.html.
- ↑ "Kepler Eyes Cluster and Known Planet". NASA. 2009-04-16. Retrieved 2009-05-09.
- ↑ "Coal-Black Alien Planet Is Darkest Ever Seen". Space.com. Retrieved 2011-08-12.
- ↑ Baldwin, Emily (2011-08-11). "Exoplanet blacker than coal". Astronomy Now. Archived from the original on 2011-09-18. Retrieved 2011-08-12.
- ↑ ட்ரெஸ் 2 பி.... புதிய கறுப்பு கிரகம் கண்டுபிடிப்பு[தொடர்பிழந்த இணைப்பு],தட்ஸ் தமிழ், ஆகத்து 13, 2011
வெளி இணைப்புகள்
[தொகு]- ட்ரெஸ் 2 பி.... புதிய கறுப்பு கிரகம் கண்டுபிடிப்பு[தொடர்பிழந்த இணைப்பு],தட்ஸ் தமிழ், ஆகத்து 13, 2011
- விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு! பரணிடப்பட்டது 2011-08-13 at the வந்தவழி இயந்திரம், தினகரன், ஆகத்து 13, 2011
- Jupiter-Sized Transiting Planet Found by Astronomers Using Novel Telescope Network பரணிடப்பட்டது 2006-09-07 at the வந்தவழி இயந்திரம்