டிரினிட்டி (அணுகுண்டு சோதனை)

| டிரினிட்டி இடம் | |
|---|---|
| ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை | |
| ஐ.அ. தேசிய வரலாற்று அடையாள மாவட்டம் | |
|
டிரினிட்டி நினைவிட கல்தூண் | |
| அமைவிடம்: | வைட் சான்ட் ஏவுகணை வீச்சு |
| அண்மை நகரம்: |
சான் அன்டோறியோ, நியூ மெக்சிக்கோ |
| கட்டியது: | 1945 |
| தே.வ.இ.பவில் சேர்ப்பு: |
அக்டோபர் 15, 1966 [1] |
| வகை NHLD: | டிசம்பர் 21, 1965 [2] |
| தே.வ.இ.ப குறிப்பெண் #: |
66000493 |
டிரினிட்டி (Trinity) என்பது உலகில் முதன்முதலில் நிகழ்ந்த அணுகுண்டு வெடிப்பு நிகழ்வின் குறிப்பெயர். இந்த அணுகுண்டு சோதனை ஐக்கிய அமெரிக்க இராணுவத்தால் சூலை 16, 1945[3][4][5][6][7] நியூ மெக்சிக்கொவின் சொகோறோவிலிருந்து தென் மேற்காக 35 மைல்கள் (56 கி.மீ) தூரத்திலுள்ள ஜோர்நாடா டெல்மியோட்டொ பாலைவனத்தில் மேற்கொள்ளப்பட்டது. (இப்பகுதி இப்போது வைட் சான்ட் ஏவுகணை வீச்சு எனப்படுகின்றது.)[8][9] இத்திகதியே அணுவாயுத உற்பத்திக்கான தொடக்கமாகக் கருதப்டுகின்றது.
டிரினிட்டி புளுடோனியத்தால் ஆன அணுவெடிப்பை ஏற்படுத்தும் கருவி ஆகும். இது த கட்ஜெட் (The Gadget) என்ற செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது.[10] இதே நுட்பத்தைப் பயன்படுத்தியே ஆகத்து 9, 1945 இல் சப்பானிய நாகசாகி நகரத்தில் வெடிக்கவைக்கப்பட்ட ஃபாட் மேன் உருவாக்கப்பட்டது. டிரினிடி ஏறக்குறைய 20 கிலோடன் நைத்திரொ டொலுயூரின் (trinitrotoluene TNT)க்கு சமமான வெடிசக்தியைக் கொண்டது.
சோதனை
[தொகு]அணுகுண்டு வெடிப்பைத் தான் கண்டு கொண்டிருந்த நேரத்தில், பகவத் கீதையின் ஒரு வரியைத் (XI,12) தான் நினைவு கூர்ந்ததாக ஓப்பன்கைமர் பின்னாட்களில் குறிப்பிட்டார்:
Page வார்ப்புரு:Verse translation/styles.css has no content.
दिवि सूर्यसहस्रस्य भवेद्युगपदुत्थिता।
यदि भाः सदृशी सा स्याद्भासस्तस्य महात्मनः।।
ஓர் ஆயிரம் சூரியன்களின் வெளிச்சமானது வானத்தில் ஒரே நேரத்தில் வெடித்தால், அது பேராற்றல் உடைய கடவுளின் ஒளிர்வைப் போல் இருக்கும்..[11]
அந்நேரத்தில் தன் மனதிற்குள் நுழைந்ததாக மற்றுமொரு வரியையும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் குறிப்பிட்டார்:
உலகமானது இந்நிகழ்வுக்கு பிறகு முன்பைப் போல் இருக்கப் போவதில்லை என்று நமக்குத் தெரியும். ஒரு சிலர் சிரித்தனர். ஒரு சிலர் அழுதனர். பெரும்பாலான மக்கள் அமைதியாக இருந்தனர். நான் பகவத் கீதையில் இருந்து ஒரு வரியை நினைவு கூர்ந்தேன்; தன்னுடைய ஈர்ப்பைப் பெறுவதற்காக, அவனது பணியைக் கண்டிப்பாகச் செய்ய வைக்க இளவரசனை இணங்க வைக்க விஷ்ணு முயற்சிக்கிறார். தன்னுடைய விஷ்வரூபத்தை எடுக்கிறார். பிறகு கூறுகிறார் 'தற்போது நான் மரணமானேன், உலகங்களை அழிப்பவனானேன்.' ஒரு வகையிலோ அல்லது மற்றொரு வகையிலோ நாம் அனைவருமே இதே போன்று எண்ணினோம்.[12][a]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2007-01-23.
- ↑ "Trinity Site". National Historic Landmarks. National Park Service. Archived from the original on 2008-02-15. Retrieved 2008-01-28.
- ↑ Ferenc Morton Szasz, The Day The Sun Rose Twice: The Story of the Trinity Site Nuclear Explosion July 16, 1945 (University of New Mexico Press, 1984). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8263-0768-2
- ↑ "The First Atomic Bomb Blast, 1945". Eyewitnesstohistory.com. Retrieved 2010-02-28.
- ↑ Chris Demarest. "Atomic Bomb-Truman Press Release-August 6, 1945". Trumanlibrary.org. Archived from the original on 2010-03-07. Retrieved 2010-02-28.
- ↑ "Final Preparations for Rehearsals and Test | The Trinity Test | Historical Documents". atomicarchive.com. Retrieved 2010-02-28.
- ↑ "TRINITY TEST - JULY 16, 1945". Radiochemistry.org. Archived from the original on 2010-03-11. Retrieved 2010-02-28.
- ↑ "Safety and the Trinity Test, July 1945". Cfo.doe.gov. Archived from the original on 2010-01-12. Retrieved 2010-02-28.
- ↑ "Atomic Bomb: Decision - Trinity Test, July 16, 1945". Dannen.com. Retrieved 2010-02-28.
- ↑ Kathryn Westcott: bbc.co.uk The day the world lit up, BBC, Friday, 15 July 2005.
- ↑ "Bhagavad Gita XI.12". Gita Supersite by இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர். September 2, 2017. Archived from the original on August 4, 2023. Retrieved November 22, 2019.
- 1 2 "J. Robert Oppenheimer on the Trinity test (1965)". Atomic Archive. Archived from the original on May 16, 2008. Retrieved 26 April 2023.
- ↑ "Chapter 11. The Universal Form, text 32". Bhagavad As It Is. Archived from the original on November 17, 2012. Retrieved October 24, 2012.
- ↑ "The Eternal Apprentice". Time. November 8, 1948 இம் மூலத்தில் இருந்து December 16, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216042355/http://content.time.com/time/magazine/article/0,9171,853367-8,00.html.
- ↑ Jungk 1958, ப. 201.
- ↑ Hijiya 2000, ப. 123–124.
வெளியிணைப்புகள்
[தொகு]- ↑ Oppenheimer spoke these words in the television documentary The Decision to Drop the Bomb (1965).[12] Oppenheimer read the original text in சமசுகிருதம், "kālo'smi lokakṣayakṛtpravṛddho lokānsamāhartumiha pravṛttaḥ" (XI,32),[13] which he translated as "I am become Death, the destroyer of worlds". In the literature, the quote usually appears in the form shatterer of worlds, because this was the form in which it first appeared in print, in Time magazine on November 8, 1948.[14] It later appeared in Robert Jungk's Brighter than a Thousand Suns: A Personal History of the Atomic Scientists (1958),[15] which was based on an interview with Oppenheimer. See Hijiya, The Gita of Robert Oppenheimer[16]
<ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found.