டிராப்பிக்ல்டர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தற்போதைய சூழ்நிலையில் விவசாய வேலைகளுக்கான கூலியாட்கள் சரிவர கிடைக்கப்பெறாமல் பெறும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் விவசாயிகள் சரியான நேரத்தில் விவசாயப்பணிகளை மேற்கொள்ள இயலாமல் நட்டத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்த குறையை போக்க உருவாக்கப்பட்டுள்ள ஓர் நவீன வேளாண் கருவியாக டிராபிக்கல்டர் விளங்குகிறது
டிராப்பிக்ல்டர் கருவியின் அங்கங்கள்[தொகு]
- விதைப்பான்
- உரமிடும் கருவி
- பார் கலப்பை
- பரம்பு பலகை
- மண் அணைக்கும் கருவி
- களை எடுக்கும் கருவி
டிராப்பிகல்டர் மூலம் பயிரிடப்படும் பயிர்கள்[தொகு]
டீராப்பிகல்டர் மூலம் வேர்கடலை, மக்காச்சோளம், சோளம், பயறு வகைகள், கம்பு மற்றும் கேழ்வரகு போன்ற பயிர்களைப் பயிரிட இயலும்.
சிறப்பு அம்சங்கள்[தொகு]
- ஒரே சமயத்தில் பார் மற்றும் சால்களை அமைத்து, அடியுரம் இட்டு, விதைவிதைத்து விதையை மூட இயலும்.
- மேலும் பயிர் வளர்ந்த பின்னர் களை எடுத்தல் மற்றும் மண் அணைத்தல் போன்றவற்றை மேற்கொள்ள இயலும்.
- மண்ணின் ஈரம் இருக்கும் போதே விவசாயப்பணிகளை விரைவாக மேற்கொள்ள இயலும்.
- சீரான இடைவெளியில் (பயிர் வரிசைகள் மற்றும் ஒரே வரிசையில் உள்ள பயிருக்கு இடையில்) விதைக்க இயலும். எனவே பயிர் எண்ணிக்கையை பராமரிக்க முடியும்.
- அடியுரத்தை சரியான மற்றும் சீரான ஆழத்தில் இடுவதால் பயிர் எளிதாக வளர்ச்சியடைய ஏதுவாக இருக்கும்.
- அகன்ற பார் சால்களை உருவாக்குவதால் மானாவாரிப் பயிரில் மழை நீரை அறுவடை செய்ய இயலும்.
- டிராப்பிக்கல்டரை உழவுமாடுகள் மற்றும் டிராக்டர் இரண்டையும் கொண்டு இயக்க இயலும் என்பதால் சிறு, குறு, மத்திய மற்றும் பெரிய விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்த இயலும்.