உள்ளடக்கத்துக்குச் செல்

டிரான்ஸ்-காரகோரம் பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்ஸ்சம் பள்ளத்தாக்கு, வடக்கு நிலங்கள், காஷ்மீர், இந்தியா
காஷ்மீரின் வடக்கு நிலங்கள் பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள சக்ஸ்சம் பள்ளத்தாக்கு மற்றும் அக்சாய் சின் பகுதிகளைக் காட்டும் வரைபடம்

டிரான்ஸ்-காரகோரம் பாதை அல்லது சக்ஸ்சம் பள்ளத்தாக்கு (Trans-Karakoram Tract Or Shaksgam Tract), பாக்கித்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியில், காரகோரம் மலைத்தொடரில் 5,200 km2 (2,000 sq mi) பரப்பளவில்[1]அமைந்த சக்ஸ்சம் பள்ளத்தாக்கை பாகிஸ்தான் சீனாவிற்கு வழங்கியது[2]. இந்தியா இப்பகுதியை தனது என வலியுறுத்துகிறது. இப்பகுதியை சீனாவின் சிஞ்சியாங் தன்னாட்சி மாகாணத்தில் உள்ள கஷ்கர் ஆட்சிப் பகுதியில் உள்ள தாஷ்குர்கன் & கர்கிலிக் கவுண்டிகளில் பரந்துள்ளது. இப்பள்ளத்தாக்கில் சக்ஸ்சம் ஆறு பாய்கிறது.

அமைவிடம்

[தொகு]

காரகோரம் மலைத்தொடரில் அமைந்த சாக்ஸ்காம் பள்ளத்தாக்கு, சியாச்சின் பனிப்பாறைக்கு வடக்கே, மக்கள் தொகை குறைவாக உள்ள ஒரு உயரமான பிராந்தியமாகும். இதன் வடக்கே சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்துடனும், தெற்கு மற்றும் மேற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்கிட்-பால்டிஸ்தானுடனும், கிழக்கே சியாச்சின் பகுதியுடனும் எல்லையைக் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக வாழ்வதற்கு உகந்ததல்லாத இந்த பிராந்தியம், பனிப்பாறைகள், மலைப்பாதைகள் மற்றும் கடுமையான வானிலை கொண்டுள்ளது. இருப்பினும் புவிசார் அரசியல் ரீதியாக, இது காஷ்மீரின் மிகவும் உணர்திறன் வாய்ந்த நிலப்பகுதிகளில் ஒன்றாகும்.

வரலாறு

[தொகு]

ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பகுதியாக இருந்த சக்ஸ்சம் பள்ளத்தாக்கு[3][4] , இந்திய விடுதலையின் போது ஜம்மு காஷ்மீர் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1947ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இராணுவத்தின் தூண்டுதல் பேரில் பழங்குடி மக்கள் ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளை ஆக்கிரமித்து பாகிஸ்தான் வசம் ஒப்படைத்தனர். 1963ஆம் ஆண்டில் சீனா-பாகிஸ்தான் செய்து கொண்ட எல்லைகள் ஒப்பந்தப்படி, சக்ஸ்சம் பள்ளத்தாக்கை பாகிஸ்தான் சீனாவிற்கு வழங்கியது. இந்த சட்ட விரோத ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கவில்லை.[5]

சீனா-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம்

[தொகு]
1962 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ காஷ்மீர்-சீனா எல்லை வரைபடம். இந்த எல்லை அதி வடக்கு பகுதியில் அமைந்துள்ளது மற்றும் 'அதிகாரப்பூர்வ பாகிஸ்தான் வரைபடத்தின் எல்லை வரையறை 1962' என்ற தலைப்புடன் ஒரு புள்ளிக் கோடாகக் காட்டப்பட்டுள்ளது.

1959ல் சக்ஸ்சம் பள்ளத்தாக்கு பகுதியை சீனா தனது நாட்டின் பகுதியாக வரைபடத்தில் குறித்து இருந்தது. இதனை எதிர்த்து பாகிஸ்தான் தனது வரைபடத்தில் சக்ஸ்சம் பள்ளத்தாக்கை தனது நாட்டின் பகுதியாக வரைபடத்தில் குறித்தது. 1962 இந்திய சீனப் போருக்குப் பின்னர் 2 மார்ச் 1963 அன்று பாகிஸ்தான் சீனாவுடன் செய்து கொண்ட வடக்கு எல்லை ஒப்பந்தப்படி, 12,810.87 சதுர மைல்கள் [33,180.0 km2] பரப்புள்ள சக்ஸ்சம் பள்ளத்தாக்கை சீனாவிற்கு வழங்கியது. இவ்வாறு செய்த வடக்கு எல்லை ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கவில்லை[6].

மீண்டும் சக்ஸ்சம் பள்ளத்தாக்கு பிணக்கு

[தொகு]

சனவரி 2026ல் நடுவில் சக்ஸ்காம் பள்ளத்தாக்கு குறித்து இந்திய ராணுவத் தளபதி தெரிவித்த கருத்துக்கள் குறித்து சீனா கடுமையான எதிர்வினை ஆற்றியுள்ளது. இரு நாடுகளும் இறையாண்மை மற்றும் எல்லைப் பிரச்சினைகள் குறித்த தங்களின் நிலைப்பாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சக்ஸ்காம் பள்ளத்தாக்கு 'சீனாவுக்குச் சொந்தமானது' என்று சீனா மீண்டும் வலியுறுத்தியிருப்பது, நீண்டகால காஷ்மீர் எல்லைத் தகராறில் பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்த, ஆனால் மூலோபாய ரீதியாக வெடிக்கும் தன்மை கொண்ட ஒரு பிளவுக்கோட்டை மீண்டும் திறந்துள்ளது.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்துடன் (CPEC) நெருக்கமாகத் தொடர்புடைய சக்ஸ்சாம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்கட்டமைப்பு கட்டுமானத்தை சீனா பாதுகாத்திருப்பது, இந்தியாவிடமிருந்து கடுமையான எதிர்வினையைத் தூண்டியுள்ளது. இந்தியா மீண்டும் அந்தப் பகுதியை 'இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி' என்று வர்ணித்துள்ளது.

இந்த கருத்து வேறுபாடு வெறும் சொல்லாடல் சார்ந்தது மட்டுமல்ல. பிராந்திய இறையாண்மை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மீதான இந்தியாவின் உரிமைகோரல்கள், மேற்கு இமயமலையில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கம் மற்றும் சிஞ்சியாங் யாங், கில்ஜித்-பால்டிஸ்தான் மற்றும் அரபிக்கடலை இணைக்கும் பிராந்திய இணைப்பின் எதிர்கால வடிவம் ஆகியவை இதில் அடங்கியுள்ளது.[7][8]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Trivei, Abishek (8 July 2019). "Why the 1963 Sino-Pakistan Boundary Agreement Is Unlawful in Light of the Recent ICJ Advisory Opinion on the Chagos Archipelago, 2019". www.jurist.org. Retrieved 2021-11-07.
  2. Amid India’s reassertions, recalling how Pakistan ceded Shaksgam Valley to China
  3. R Chandrashekhar (2017). THE GILGIT AND BALTISTAN REGIONS OF JAMMU AND KASHMIR STATE (PDF). New Delhi: Xtreme Office Aids Pvt. Ltd. p. 63. ISBN 978-93-84492-36-6. An area that is legally part of the state of Jammu and Kashmir has since 1963 been administered by China as a part of Kargilik County and Taxkorgan Tajik Autonomous County in the Kashgar Prefecture of Xinjiang Autonomous Region. Prior to 1963 the Shaksgam tract had been administered as a part of Shigar. {{cite book}}: |website= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Complete Atlas Of The World (3 ed.). Penguin Random House. 2016. p. 238 – via Internet Archive. (claimed by India)
  5. "India lodges protest with China over its infra development in Shaksgam valley". The Indian Express (in ஆங்கிலம்). 2024-05-02. Retrieved 2024-06-12.
  6. Formal statement of Mr. Jawaharlal Nehru in the Parliament of India]on March 5, 1963
  7. Shaksgam Valley: India bristles over China's fresh claim - dispute explained
  8. India 'hyping' Shaksgam valley issue, China responds to Army chief's remarks

ஆதார நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிரான்ஸ்-காரகோரம்_பாதை&oldid=4445216" இலிருந்து மீள்விக்கப்பட்டது