டிராகன் (இராசி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


டிராகன் சீன வருட இராசிகளில் உள்ள ஒரு விலங்கு ஆகும். டிராகன் மட்டுமே சீன ராசிகளில் உள்ள ஒரே மாய விலங்கு ஆகும். மற்ற மிருகங்கள் அனைத்தும் உண்மையில் இருப்பவை. சீன சோதிடத்தில் ஒவ்வோரு வருடமும் ஒவ்வொரு விலங்கின் ஆண்டாக கருதப்படுகிறது. சீனாவில், டிராகன்கள் வலிமை, உடல்நலம், அதிர்ஷ்டம் மற்றும் அமைதியோடு தொடர்பு படுத்தப்படுபவை. எனவே டிராகன் படங்கள் கதவுகளுக்கு மேலும் கூரைகளுக்கு மேலும் தீய சக்திகளை விரட்ட வைக்கப்படுகின்றன. சீன நம்பிக்கையின் படி, டிராகன் வருடத்தில் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றனர்.

டிராகன் வருடங்கள்[தொகு]

கீழ்க்கண்ட வருடங்களில் பிறந்தவர்களில் பிறந்தவர்கள் டிராகன் வருடங்களில் பிறந்தவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் டிராகனின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள் ஆகையால் டிராகனின் குணநலன்களை பெற்றவர்களாக கருதப்படுகின்றனர். அந்த டிராகன் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சீன ஐம்பூதங்களுள் ஒன்றுடன் தொடர்புடையன.

குணங்கள்[தொகு]

டிராகன் அனைத்து அறிந்தது. டிராகன் பகட்டானது, வசீகரமானது, தன்னுள் அளவற்ற வீரியத்தையும் வலிமையை யும் கொண்டது. சீனாவில் டிராகன் சீன சக்கரவர்த்தியின் சின்னமாக கருதப்படுகிறது. மேலும் டிராகன் யாங் தத்துவத்துடன் தொடர்புடையது. பொதுவாக டிராகன் அதிகாரம் மற்றும் செல்வத்தின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே டிராகன் வருடத்தில் பிறந்தவர்கள் இந்த குணநலன்கள் அனைத்து உடையவராக கருதப்படுகிறார்கள். டிராகன் வருடத்தில் பிறந்தவர்கள் அதிகாரமும் அதிர்ஷ்டமும் வாய்ந்தவர்கள், அவர்களிடத்தில் ஒரு இயல்பான வசீகரம் இருக்கும். எனவே மக்கள் கூடுமிடத்தில் இவர்களை கண்டு கொள்ளாமல் இருக்க இயலாது. டிராகன் வருடத்தவர்கள் ஒரு சுறுசுறுப்பான உள்ளம் உடையவர்கள். மேலும் மற்ற விஷயங்களில் பாசாங்கு இல்லாத ஈடுபாட்டை காட்டுபவர்கள். இவர்கள் தன்னம்ம்பிக்கை மிக்கவர்களாக இருப்பர். மேலும் அனைத்தையும் ஆடம்பரமாக செய்வதில் விருப்பமுடையார்களாக இருப்பர். கொஞ்சம் தற்பெருமை கொண்டவர்கள். தான் நினைத்ததை எவ்வாறேனும் சாதிக்க நினைப்பவர்கள். டிராகன் வருடத்தவர்கள் அளவில்லாத ஆற்றலையும் அறிவையும் தக்கவாறு பயன்படுத்த அறிந்து கொண்டால் அனைத்தையும் சாத்தித்து விதியை வெற்றிக்கொள்பவர்கள். தன்னை அனைவரும் கவனிக்க வேண்டுமென விரும்பினாலும் தைரியமும் ஈகை குணமும் உடையவர்கள். டிராகன் வருடத்தவர்களின் நண்பர்கள் ஏதேனும் சிக்கலில் இருந்தால் அவர்களாகவே முன் வந்து சிக்க்லை தீர்த்து வைப்பர். மற்ற அனைவரும் ஒரு பிரச்சினையை விட்டு விலகிய நிலையில் டிராகன் வருடத்தவர்கள் முன்நின்று பிரச்சினையை அதிகாரத்துடன் தீர்ப்பர். டிராகன் வருடத்தவர்கள் தங்களுக்கென்றும் மற்றவர்களுக்கென்றும் ஓர் உயரிய அளவுகோலை வைத்திருப்பர். எனினும் இந்த காரணத்தில் மற்றவர்களுடைய பலமின்மையை இவர்களாக அறிய இயலாது

டிராகன் வருடத்த்வர்களான சிறந்த துறைகள், அரசர், ராணுவம், அரசியல், இசைக்க்லை, கவி, கலைஞன், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல், ஓட்டம், தலைவர், நிறுவன அதிகாரி, ஆய்வு மற்றும் வழக்காடுதல்

டிராகன் வருடங்களில் பிறந்த்வர்கள் எலி, குரங்கு மற்றும் பாம்பு வருடங்களில் பிறந்தவர்களோடு மிகவும் ஒத்துப்போவர்

பாரம்பரிய குணவியல்புகள்[தொகு]

இயல்பு
ராசி இடம் 5வது
ஆளும் நேரம் காலை 7- காலை 9:00
திசை கிழக்கு-தென்கிழக்கு
பருவம் மற்றும் மாதம் வசந்தம், ஏப்ரல்
ரத்தினம் செவ்வந்திக்கல்(Amethyst)
நிறம் கருப்பு, தங்க நிறம்
மேற்கத்திய ராசி மேஷம் (மேற்கத்திய ராசி)
துருவம் [[யாங்]
பஞ்சபூதம் மரம்
உணவு கோதுமை, பறவைகள்
விரும்பத்தக குணங்கள் உய்ர்ந்த குணம், விழைதல், மரியாதை நிரம்பிய, வசீகரம், உற்சாகம், பரந்த

மனப்பாண்மை, அதிகாரம், பரப்புடைய

விரும்பத்தகாத குணங்கள் இரக்கமற்ற, ஆணவம், கொள்கைப்பற்று, ஆடம்பரம், எதேச்சாதிகரம்,

சகிப்புத்தனமை இல்லாமை

நாடுகள் சீனா, ஐக்கிய ராஜ்ஜியம், ஈரான், டென்மார்க், ஜப்பான், பல்கேரியா
மிகுந்த ஒத்தியல்புடைய எலி, குரங்கு, பாம்பு மற்றும் சேவல் வருடங்களில் பிறந்தவர்கள்
ஓரளவு ஒத்தியல்புடைய டிராகன், பண்றி, புலி, காளை வருடங்களில் பிறந்தவர்கள்
முரணான குதிரை, ஆடு, முயல், நாய் வருடங்களில் பிறந்தவர்கள்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிராகன்_(இராசி)&oldid=3214555" இலிருந்து மீள்விக்கப்பட்டது