டியூட்டெரோஸ்டோம்
Appearance
Deuterostomes புதைப்படிவ காலம்:Ediacaran - Recent 635–0Ma | |
---|---|
Sea cucumbers and other echinoderms are deuterostomes. | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
துணைத்திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
பெருந்தொகுதி: | Deuterostomia Grobben, 1908
|
Phyla | |
டியூட்டெரோஸ்டோம் (deuterostomia) என்பது முப்படைகளுள்ள விலங்குகளின் பிரதான இரு பிரிவுகளுள் ஒன்றாகும். மற்றையது புரொட்டோஸ்டோம் ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளும் முளையவியல் அடிப்படையில் வேறுபட்டுள்ளன. டியூட்டெரோஸ்டோம் எனும் சொல் இரண்டாவதாக வாய் எனப் பொருள் படுமாறு உள்ளது. மனிதன் உட்பட அனைத்து முள்ளந்தண்டுளிகளும், முட்தோலிகளும் வேறு சில கணங்களும் இவ்விலங்குப் பிரிவினுள் அடங்குகின்றன. டியூட்டெரோஸ்டோம்களின் முளைய விருத்தியின் போது பின்வரும் பிரதான இயல்புகள் வெளிக்காட்டப்படுகின்றன:
- கருக்கட்டலுக்கு முன் தீர்க்கப்படாத முட்டை உருவாக்கப்படல். அதாவது புரொட்டோஸ்டோம் போல முட்டைக் கலக் குழியவுரு அக, இடை, புற முதலுருப்படைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதில்லை.[1]
- எட்டுக்கல நிலையிலிருந்து ஆரைப் பிளவு முறையில் கலப்பிரிவு இடம்பெறும்.
- புன்னுதரனாதலின் போது உருவாகும் அரும்பரில்லி பின்னர் குதமாக மாற்றமடையும். அதாவது முளைய விருத்தியின் போது முதலில் குதம் உருவான பின்னரே வாய் உருவாகின்றது.
- இவற்றில் உடற்குழி குடற்குழிய முறையில் உருவாக்கப்படுகின்றது. அதாவது முளையத்தின் ஆதிக் கருக்குடலில் ஏற்படும் குழிவு மூலம் உடற் குழி உருவாக்கப்படுகின்றது.
பிரதான டியூட்டெரோஸ்டோம் விலங்குக் கணங்கள்:
- முதுகுநாணிகள் (Chordata)
- Hemi chordata
- முட்தோலிகள் (Echinodermata)
- Xenoturbellida
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Halanych, K.M., Bacheller, J., Liva, S., Aguinaldo, A. A., Hillis, D.M. and Lake, J.A. (1995). "18S rDNA evidence that the Lophophorates are Protostome Animals". Science 267 (5204): 1641–1643. doi:10.1126/science.7886451. பப்மெட்:7886451. Bibcode: 1995Sci...267.1641H.