டியர் சன் மருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டியர் சன் மருது
இயக்கம்எம். சோலை ராஜேந்திரன்
தயாரிப்புஎம். ஜகந்நாதன்
கதைஎம். சோலை ராஜேந்திரன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பி.தயாளன்
எம். கேசவன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்மதன்ஸ் மூவி கிரியேஷன்ஸ்
வெளியீடுதிசம்பர் 21, 1995 (1995-12-21)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டியர் சன் மருது (Dear Son Maruthu) 1995 ஆம் ஆண்டு ரகுமான் மற்றும் சௌந்தர்யா நடிப்பில், தேவா இசையில், எம். சோலை ராஜேந்திரன் இயக்கத்தில், எம். ஜெகந்நாதன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3].

கதைச்சுருக்கம்[தொகு]

மருது (ரகுமான்) தான் செய்யாத குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கிறான். அவன் சிறை செல்ல காரணமானவர் வழக்கறிஞர் ராணி (சௌந்தர்யா). சிறையிலிருந்து விடுதலையாகும் மருது நேரே ராணியைக் காணச் செல்கிறான். தன் தவறுக்காக மன்னிப்பு கோரும் ராணியைத் தான் காதலிப்பதாகக் கூறுகிறான் மருது. இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். மருது தன் தம்பி ரவியுடன் (சிவா) சேர்ந்து நடனப்பள்ளி நடத்துகிறான்.

நரம்பியல் மருத்துவரான விஸ்வநாதனுடன் (சிவகுமார்) நட்பாகிறான் மருது. விஸ்வநாதனின் மனைவி பார்வதி (ஸ்ரீவித்யா). சில வருடங்களுக்கு முன் ஒரு கோயில் திருவிழாவில் தங்கள் மகன் அசோக்கை சிறுவயதில் தொலைத்தது முதல் பார்வதி மனநிலை பாதிக்கப்படுகிறாள். இதனால் முன்பின் அறியாத அந்நியரைத் தன் மகன் அசோக் எனக்கருதி வீட்டிற்கு அழைத்து வந்து விடும் பழக்கமுடையவள்.

காவேரி (ரூபாஸ்ரீ) ரவியைக் காதலித்தாலும் அதை ரவியிடம் சொல்லத் தயங்குகிறாள். இதை அறிந்த மருது அவன் தம்பியிடம் காவேரியின் காதலைப் பற்றிக் கூறுகிறான். ஒருநாள் காவேரியிடம் தவறாக நடக்க முயலும் ரவியை மருது அடித்ததில் ரவி இறக்கிறான். ரவியைத் தப்பித்துச்செல்லுமாறு கூறுகிறார் விஸ்வநாதன்.

அதன் பிறகு காணாமல் போன தன் மகன் அசோக்தான் ரவி என்று விஸ்வநாதனுக்குத் தெரியவருகிறது. மருதுவைத் தற்செயலாகக் காணும் பார்வதி அவனைத் தன் மகன் அசோக் எனக்கருதி வீட்டிற்கு அழைத்துவருகிறாள். அதன்பின் நடப்பது மீதிக்கதை

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் வைரமுத்து மற்றும் பிறைசூடன்.

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 சின்னஞ்சிறு மனோ 3:26
2 சின்னஞ்சிறு சித்ரா 3:21
3 பிளையிங் கிஸ் எஸ். ஜானகி 3:50
4 மழைக்காற்று மனோ, சுவர்ணலதா 4:42
5 மலருது நிலவு பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா 5:06
6 பூவிழி வாசலிலே மனோ 5:01

மேற்கோள்கள்[தொகு]

  1. "டியர் சன் மருது" இம் மூலத்தில் இருந்து 2019-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190329134955/http://www.gomolo.com/dear-son-maruthu-movie/11918. 
  2. "டியர் சன் மருது" இம் மூலத்தில் இருந்து 2004-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040825040158/http://www.cinesouth.com/cgi-bin/filmography/allCast.cgi?id=1862. 
  3. "டியர் சன் மருது" இம் மூலத்தில் இருந்து 2009-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090708040815/http://jointscene.com/movies/Kollywood/Dear_Son_Marudhu/8385. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டியர்_சன்_மருது&oldid=3660127" இருந்து மீள்விக்கப்பட்டது