உள்ளடக்கத்துக்குச் செல்

டிம் பிரெஸ்னன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிம் பிரெஸ்னன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டிமோட்டி (டிம்) தோமஸ் பிரெஸ்னன்
பட்டப்பெயர்பிஸ்
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு-மிதம்
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 643)மே 6 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசனவரி 3 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 194)சூன் 17 2006 எ. இலங்கை
கடைசி ஒநாபசனவரி 21 2011 எ. பாக்கிஸ்தான்
ஒநாப சட்டை எண்20
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 7 35 100 171
ஓட்டங்கள் 164 455 2,976 1,630
மட்டையாட்ட சராசரி 32.80 25.27 27.30 19.63
100கள்/50கள் –/1 –/1 3/14 –/4
அதியுயர் ஓட்டம் 91 80 126* 80
வீசிய பந்துகள் 1,482 1,713 16,633 7,349
வீழ்த்தல்கள் 25 40 268 182
பந்துவீச்சு சராசரி 28.28 38.07 31.93 34.05
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/50 5/48 5/42 4/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/– 8/– 41/– 44/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 9 2011

டிமோட்டி (டிம்) தோமஸ் பிரெஸ்னன்: (Timothy 'Tim' Thomas Bresnan , பிறப்பு: பெப்ரவரி 28, 1985), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். அணியின் இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை விரைவு-மித பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ரே மற்றும் ஜூலி ப்ரெஸ்னன் ஆகிய தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த டிம், காஸில்ஃபோர்டு உயர்நிலைப் பள்ளி தொழில்நுட்பம் மற்றும் விளையாட்டுக் கல்லூரியில் பயின்றார். பின்னர் போண்டெஃப்ராக்ட்டின் நியூ கல்லூரியில் பயின்றார். டவுன்வில் துடுப்பாட்ட சங்கத்தில் இளையோர் துடுப்பாட அணிக்காக இவர் விளையாடினார். இந்தத் துடுப்பாட்டச் சங்கத்தில் தான் இவரது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களான நிக் மற்றும் ரிச்சி ஆகியோர் துடுப்பாட்டம் விளையாடினர். அவர் ஹன்னா என்பவர் மணந்தார். அவர்களுக்கு மேக்ஸ் எனும் ஒரு மகன் உள்ளர்.இவரது மைத்துனர் ஆண்ட்ரூ கேல் யார்க்ஷயர் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் சக வீரர் ஆவார் .  

சர்வதேச வாழ்க்கை

[தொகு]

2006 இலங்கை

[தொகு]

பிரெஸ்னன் இளைஞர் இங்கிலாந்துத் துடுப்பாட்ட பிரதிநிதித்துவப்படுத்தினார். 7 இளைஞர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மற்றும் 23 இளைஞர் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து U-19 அணிக்காக பங்கேற்றார். [1] ஜூன் 2006 இல் அயர்லாந்துத் துடுப்பாட்ட அணி மற்றும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக விளையாடுவதற்காக இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம் பெற்றார். ஜூன் 15, 2006 அன்று ரோஸ் பவுலில் இலங்கைக்கு எதிரான இருபதுக்கு -20 சர்வதேச போட்டியில் பிரெஸ்னன் அறிமுகமானார். இஅந்தப் போட்டியில் அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 ரன்கள் எடுத்தார் மற்றும் தனது இரண்டு நிறைவுகளில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் தனது முதல் ஒருநாள் போட்டியில் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் இதெ துடுப்பாட்ட அணிக்கு எதிராக அறிமுகமானார்.இந்தப் போட்டியில் 44 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணி 20 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.[2]

2009 மேற்கிந்திய தீவுகள்

[தொகு]

ஏப்ரல் 29, 2009 அன்று, மூன்று ஆண்டுகள் ஓய்விற்குப் பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டித் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ப்ரெஸ்னன் இடம் பெற்றார். காயமடைந்த ஆண்ட்ரூ பிளின்டாஃபிற்குப் பதிலாக இவர் தேர்வானார். ஏழு நாட்களுக்குப் பிறகு பிரெஸ்னன் இங்கிலாந்து அணிக்காக லார்ட்ஸில் நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். மட்டையாட்டத்தில் இவர் 9 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் இவர் இழப்புகளை எதுவும் கைப்பற்றவில்லை. ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் சக வீரர் கிரஹாம் ஓனியன்ஸ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதனால் இவருக்குப் பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், இரண்டாவது போட்டியில், ப்ரெஸ்னன் தனது முதல் இழப்பாக பிரெண்டன் நாஷ் உட்பட மூன்று இழப்புகளை வீழ்த்தினார், பின்னர் இரண்டு பந்துகளுக்குப் பின்னர் தேனேஷ் ராம்தின் இழப்பினைக் கைப்பற்றினார். [3]

2009 தென்னாப்பிரிக்கா

[தொகு]

இங்கிலாந்தின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் ப்ரெஸ்னன் விளையாடினார். அவர் இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் விளையாடினார். இரண்டாவது போட்டியில், அவர் பத்து நிறைவுகள் வீசி 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். அதில் 2 இழப்புகளை எடுத்தார்.அடுத்த போட்டியில் அவர் 8 நிறைவுகளை வீசி 15 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.இதில் 2 இழப்பினை மட்டுமே கைப்பற்றினார்.இந்தப் போட்டியில் இங்கிலாந்து ஏழு இழப்பு வித்தியாசத்தில் வென்றது.

சான்றுகள்

[தொகு]
  1. Tim Bresnan profile, Cricket Archive, பார்க்கப்பட்ட நாள் 28 May 2012
  2. http://www.espncricinfo.com/series/14638/scorecard/225271/england-vs-sri-lanka-only-t20i-sri-lanka-tour-of-england-2006
  3. Miller, Andrew (18 May 2009). "Bresnan and Anderson swing through Windies". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 May 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டிம்_பிரெஸ்னன்&oldid=3006947" இலிருந்து மீள்விக்கப்பட்டது