டின்(IV) குளோரைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
Tetrachlorostannane
Tin tetrachloride Tin(IV) chloride | |||
வேறு பெயர்கள்
சிடானிக் குளோரைடு
| |||
இனங்காட்டிகள் | |||
7646-78-8 ![]() 10026-06-9 (pentahydrate) ![]() | |||
ChemSpider | 22707 ![]() | ||
EC number | 231-588-9 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 24287 | ||
வே.ந.வி.ப எண் | XP8750000 | ||
SMILES
| |||
UN number | 1827 | ||
பண்புகள் | |||
SnCl4 | |||
வாய்ப்பாட்டு எடை | 260.50 g/mol (anhydrous) 350.60 g/mol (pentahydrate) | ||
தோற்றம் | colorless to slightly yellow fuming liquid | ||
மணம் | acrid | ||
அடர்த்தி | 2.226 g/cm3 (anhydrous) 2.04 g/cm3 (pentahydrate) | ||
உருகுநிலை | |||
கொதிநிலை | 114.15 °C (237.47 °F; 387.30 K) | ||
decomposes (anhydrous) very soluble (pentahydrate) | |||
கரைதிறன் | ஆல்ககால், பென்சீன், டொலுயீன், குளோரோபார்ம், அசிட்டோன், மண்ணெண்ணெய், CCl4, மெத்தனால், கல்நெய், CS2 இவற்றில் கரைகிறது. | ||
ஆவியமுக்கம் | 2.4 kPa | ||
−115·10−6 cm3/mol | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.512 | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | monoclinic (P21/c) | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0953 | ||
ஈயூ வகைப்பாடு | Corrosive (C) | ||
R-சொற்றொடர்கள் | R34, R52/53 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S7/8, S26, S45, S61 | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | டின்(IV) புளுரைடு டின்(IV) புரோமைடு டின்(IV) அயாேடைடு | ||
ஏனைய நேர் மின்அயனிகள் | கார்பன் டெட்ராகுளோரைடு சிலிக்கான் டெட்ராகுளோரைடு செர்மானியம் டெட்ராகுளோரைடு டின்(II) குளோரைடு காரியம்(IV) குளோரைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
டின்(IV) குளோரைடு ஒரு கனிமச்சேர்மம் ஆகும். இதன் வாய்ப்பாடு SnCl4. இது டின் டெட்ரா குளோரைடு அல்லது சிடானிக் குளோரைடு என்றும் அழைக்கப்படுகிறது. அறைவெப்பநிலையில் நிறமற்ற திரவமாக உள்ளது. பிற சேர்மங்கள் தயாரிப்பதற்கு முன்னோடிப் பொருகளாகவும் உள்ளது.[1]. இதனை முதன் முதலில் (1550-1616)ல் ஆண்ட்ரியசு லிபாவியசு (Andreas Libavius) என்பவர் கண்டறிந்தார்.
தயாரிப்பு[தொகு]
115 டிகிரி செல்சியஸ் (239 டிகிரி பாரன்ஹீட்) வெப்பநிலையில் டின் மற்றும் குளோரின் வாயு வினைபுரிந்து உருவாகிறது.
: Sn + 2 Cl2 → SnCl4
அமைப்பு[தொகு]
நீரேற்றம் பெற்ற டின் டெட்ராகுளோரைடின் பல வடிவங்கள் அறியப்பட்டுள்ளன. படிகமாக்கப்பட்ட பல்வேறு அளவுள்ள நீர் மூலக்வகூறுகளுடன் அனைத்து [SnCl4(H2O)2] மூலக்கூறுகளும் ஒன்றாக இணைந்துள்ளன. கூடுதல் நீர் மூலக்கூறுகள் [SnCl4(H2O)2] உடன் ஐதரசன் பிணைப்பு [2] மூலம் இணைந்துள்ளன. பென்டாஐதரேட்டுகள் பொதுவான ஐதரேட்டாகும்.[3]
வினைகள்[தொகு]
நீரற்ற டின்(IV) குளோரைடு ஒரு லூயிஸ் அமிலம். அது அம்மோனியா, ஆர்கனோபாசுபீன்சு, மற்றும் பிற லூயிசு காரங்களுடன் கூட்டு விளைபொருட்களைத் தருகிறது. சிறிதளவு நீருடன் இதனைச் சேர்க்கும் போது அரைதிண்ம நிலை படிகமான பென்டாஐதரேட்டினைத் SnCl4·5H2O தருகிறது. இந்த திடப்பொருள் வெண்ணெய் டின் என்று அழைக்கப்படுகிறது. ஐதரோகுளோரிக் அமிலத்துடன் சிக்கலான [SnCl6]2− இணைந்து உருவாகும் பொருள் எக்சாகுளோரோசிடானிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது.
பயன்கள்[தொகு]
SnCl4ன் முக்கியமான பயன்பாடு ஆர்கனோடின் சேர்மங்கள் தயாரிப்பதற்கு முன்னோடிப் பொருளாக உள்ளதாகும். மேலும் அவை வினையூக்கிகள் மற்றும் பாலிமர் நிலைப்படுத்திகளாகவும்[4] பயன்படுகின்றன. சால் ஜெல் செயல்முறை (குழைமக் கரிக்கண்ணாடி) மூலம் SnO2 பூச்சுகளை தயாரிப்பதற்கு பயன்படுகிறது. SnO2 இன் நுண்ணுட்பம் வாய்ந்த படிகங்கள் இந்த முறையின் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
பாதுகாப்பு[தொகு]
உலக போரில் இரசாயண ஆயுத மாக சிடானிக் குளோரைடு பயன்படுத்தப்பட்டது. காற்றுடன் தொடர்பு ஏற்படும்போது ஒருவித எரிச்சலை உண்டாக்கக்கூடிய அடர்ந்த புகையை (ஆனால் இறப்பினை ஏற்படுத்தாத) உண்டாக்குகிறது. உலகப்போரில் டின்[5] பற்றாக்குறை ஏற்பட்டபோது சிலிக்கான் டெட்ராகுளோரைடு மற்றும் தைட்டானியம் டெட்ராகுளோரைடு கலவைகள் பதிலிப்பொருளாக பயன்படுத்தப்பட்டன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier ISBN 0-12-352651-5
- ↑ Barnes, John C.; Sampson, Hazel A.; Weakley, Timothy J. R. (1980). "Structures of di-μ-hydroxobis[aquatrichlorotin(IV)]-1,4-dioxane(1/3), di-μ-hydroxobis[aquatrichlorotin(IV)]-1,8-epoxy-p-menthane(1/4), di-m-hydroxobis[aquatribromotin(IV)]-1,8-epoxy-p-menthane(1/4), di-μ-hydroxobis[aquatrichlorotin(IV)], and cis-diaquatetrachlorotin(IV)". J. Chem. Soc., Dalton Trans. (6): 949. doi:10.1039/DT9800000949.
- ↑ Genge, Anthony R. J.; Levason, William; Patel, Rina; Reid, Gillian; Webster, Michael (2004). "Hydrates of tin tetrachloride". Acta Crystallographica Section C 60 (4): i47–i49. doi:10.1107/S0108270104005633.
- ↑ G. G. Graf "Tin, Tin Alloys, and Tin Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2005 Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a27_049
- ↑ Fries, Amos A. (2008). Chemical Warfare. Read. பக். 148–49, 407. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4437-3840-9