டார்வினியவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டார்வினிய பரிணாம வளர்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சார்லஸ் டார்வின், 1868

டார்வினியவாதம் (ஆங்கிலம்: Darwinism) என்பது ஆங்கில இயற்கையியலாளர் சார்லஸ் டார்வின் (1809–1882) உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்ட உயிரியல் பரிணாமக் கோட்பாடாகும். அனைத்து வகையான உயிரினங்களும் அவ்வுயிரின வகையைச் சேர்ந்த தனிநபரின் போட்டியிட்டு, உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும் திறனை அதிகரிக்கக்கூடிய சிறிய, மரபுவழி மாறுபாடுகளின் இயற்கையான தேர்வின் மூலம் உருவாகின்றன என்பதே டார்வினியவாதம் ஆகும். இது டார்வினியக் கோட்பாடு என்றும் டாரிவினிய பரிணாமம் என்றும் டார்வினிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உண்மையுருவில் இக்கோட்பாடானது உயிரினங்களின் மாற்றம் அல்லது பரிணாம வளர்ச்சியின் பரந்த கருத்துகளோடு கூட டார்வினின் கோட்பாடுகளுக்கு முந்தைய கருத்துக்களையும் உள்ளடக்கியது. இது 1859-ல் டார்வின் தனது ஆன் தி ஆரிஜின் ஆவ் ஸ்பீசீஸ் என்ற நூலினை வெளியிடப்பட்ட பிறகு அறிவியல் உலகின் பொது அங்கீகாரத்தைப் பெற்றது. ஆங்கில உயிரியலாளர் தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி ஏப்ரல் 1860-ல் டார்வினிசம் என்ற சொல்லை உருவாக்கினார்.[1]

மேற்கோள் தரவுகள்[தொகு]

  1. Thomas Henry Huxley (April 1860). "ART. VIII.—Darwin on the Origin of Species". Westminster Review (London: Baldwin, Cradock, and Joy) 17: 541–570. http://darwin-online.org.uk/content/frameset?viewtype=side&itemID=A32&pageseq=29. பார்த்த நாள்: 2008-06-19. "What if the orbit of Darwinism should be a little too circular?". 

தரவுகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்வினியவாதம்&oldid=3622404" இலிருந்து மீள்விக்கப்பட்டது