டார்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Megalops|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
டார்பன்
புதைப்படிவ காலம்:Albian–present
[1][2]
Atlantic tarpon
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Megalops
Species
வேறு பெயர்கள் [3]
 • Amia Browne 1756 ex Browne 1789 non Gronow 1763 ex Gray 1854 non Meuschen 1781 non Linnaeus 1766
 • Brisbania de Castelnau 1878
 • Cyprinodon Hamilton 1822 non Lacépède 1803
 • Oculeus Commerson ex Lacépède 1803
 • Tarpon Jordan & Evermann 1896

டார்பன் (Tarpon) என்பவை மெகலோப்ஸ் இனத்தைச் சேர்ந்த மீன் இனமாகும். இவை மெகலோபிடே குடும்பத்தின் ஒரே உறுப்பினர் ஆகும். இவை இரண்டு இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று ( எம். அட்லாண்டிகஸ் ) இது அத்திலாந்திகைச் சேர்ந்தது. மற்றொன்று ( எம். சைப்ரினாய்டுகள் ) இந்தோ-பசிபிக் பெருங்கடல்களில் உள்ளது.

இனங்கள் மற்றும் வாழ்விடங்கள்[தொகு]

டார்பன் மீன்களின் இரண்டு உட்பிரிவாக M. atlanticus ( அட்லாண்டிக் டார்பன் ) மற்றும் M. cyprinoides ( இந்தோ-பசிபிக் டார்பன் ) உள்ளன. அட்லாண்டிக் டார்பன் மீனானது மேற்கு அட்லாண்டிக் கடற்கரையில் வர்ஜீனியா முதல் பிரேசில் வரை, கரிபியன் மற்றும் மெக்சிகோ வளைகுடாவின் கடற்கரையிலும், கிழக்கு அட்லாண்டிக் கடற்கரையில் செனிகல் முதல் தெற்கு அங்கோலா வரையிலும் காணப்படுகின்றன. [4] இந்தோ பசிபிக் டார்பன்கள் தென்கிழக்காசியா, யப்பான், தாகித்தி, ஆத்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரைகளில் காணப்படுகின்றன. இரண்டு இனங்களும் கடல் மற்றும் நன்னீர் வாழ்விடங்களில் காணப்படுகின்றன, பொதுவாக நன்னீர் சதுப்பு நிலங்களை அணுக இவை ஆறுகள் வழியாக ஏறுகின்றன. [5] காற்றுப்பை அல்லது நீந்தும் சவ்வுப்பை ஆகியவற்றைக் கொண்ட கடல் மீன்களில் இந்த மீன்களும் ஒன்றாகும். மிதப்புத் தன்மையை கட்டுப்படுத்த உதவும் இந்தக் காற்றுப் பைக நுரையீரல் போலவும் செயல்படுகிறது. இதனால் டார்பன் மீன்கள் நீரின் மேற்பரப்புக்கு வந்து, நேரடியாக காற்றை சுவாசிக்க உதவுகிறது. டர்போன்களின் வாழ்விடங்கள் அவற்றின் வளர்ச்சி நிலைகளைப் பொறுத்து பெரிதும் வேறுபடுகின்றன. முதல் நிலை உயிர்கள் பொதுவாக தெளிவான, வெப்பமான, கடல் நீரில், ஒப்பீட்டளவில் மேற்பரப்புக்கு அருகில் காணப்படும். இரண்டாம் நிலைநிலை, மூன்றாம் நிலை குடம்பிகள் உவர்ச் சதுப்பு நிலங்கள், கடலை ஒட்டிய பாறைக் குளங்கள், சிற்றோடைகள், ஆறுகளில் காணப்படுகின்றன. அவற்றின் வாழ்விடங்களாக வெப்பமான, ஆழமற்ற, இருண்ட நீர்நிலைகள் மணல் மண் அடிப்பகுதியாக உள்ளன. டார்பன்கள் பொதுவாக ஆறுகளின் புதிய நீரில் ஏறுமீனாக ஏறுகின்றன. அவை இளமைப் பருவத்திலிருந்து பருவமடையும் வயது வரை நன்னீர் வாழ்விடங்களில் இருந்து, பின்னர் கடல் நீருக்குத் திரும்புகின்றன. [6] [7]

புதைபடிவ இனங்கள்[தொகு]

செல்மாசரஸ் (ஒரு மொசாஸர் ) ஒரு வரலாற்றுக்கு முந்தைய டார்போனை வேட்டையாடுகிறது

இந்த இனத்தின் புதைபடிவங்கள் 113.0 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (மியா) அல்பியன் கட்டத்தில் கிரீத்தேசியக் காலம்வரை காணப்படுகிறது. [8] [9]

உடல் பண்புகள்[தொகு]

டார்பன்கள் சுமார் 4–8 அடி (1.2-2.4 மீ) நீளமும், 60–280 எல்பி (27-127 கிலோ) எடை வரையும் வளரும். இவற்றின் முதுகுத் துடுப்பின் இறுதியில் ஒரு இழை நீண்டிருக்கும். வால் கவை வாலாக இருக்கும். டார்பனின் கீழ் துடுப்பு உடலின் பின்புறம் சற்று தள்ளி அமைந்திருக்கும். டார்பான்கள் உடலில் பளபளப்பான, வெள்ளி நாணயம் போன்ற செதில்கள் உள்ளன. அவை மீனின் தலையைத் தவிர, அவற்றின் உடலின் பெரும் பகுதியை மூடியுள்ளன. இவை பெரிய கண்களையும், அதற்கேற்றவாறு கொழுப்புத் தன்மையுள்ள பெரிய இமைகளையும் கொண்டுள்ளன. இவற்றின் கீழ் தாடையானது முகத்தின் மற்ற பகுதிகளை விட அதிகமாக நீண்டிருக்கும். [4] [5] [6]

இனப்பெருக்கம் மற்றும் வாழ்க்கை சுழற்சி[தொகு]

வெப்பமான, தனிமைப்படுத்தப்பட்ட கடல் பகுதிகளில் டார்பன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. பெண் மீன்கள் ஒரே நேரத்தில் 12 மில்லியன் முட்டைகள் வரை இடும். இந்த மீன்கள் 75–125 செமீ (30-50 அங்) வளர்ந்த பிறகு பாலியல் முதிர்ச்சியை அடைகிறன. இவை பொதுவாக வசந்த காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோடையின் ஆரம்பத்தில் முட்டையிடுகின்றன. [6] முட்டையில் இருந்து வெளிவரும் உயிரினமானது அவற்றின் மூன்று வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் வெவ்வேறு வாழ்விடங்களில் வளர்கிறது. முதல் கட்டம், லெப்டோசிஃபாலஸ் நிலை அல்லது முதல் நிலை 20-30 நாட்களுக்குப் பிறகு நிறைவடைகிறது. இது பொதுவாக கடலின் மேற்பரப்பில் இருந்து 10-20 மீட்டருக்குள், தெளிவான, வெப்பமான கடல் நீரில் நடைபெறுகிறது. லெப்டோசிஃபாலஸ் லார்வாவாக வளரும்போது சுருங்குகிறது; மிகவும் சுருங்கிய லார்வா, இரண்டாம் கட்டத்தில், 70 வது நாளில் உருவாகிறது. இந்த எதிர்மறை வளர்ச்சி கட்டத்தைத் தொடர்ந்து மந்தமான வளர்ச்சி ஏற்படுகிறது. 70 வது நாளில், குஞ்சு வளர்ச்சி கட்டம் தோன்றுகிறது. இந்த மூன்றாம் நிலை தொடங்கி மீன் பாலியல் முதிர்ச்சி அடையும் வரை வேகமாக வளரத் தொடங்குகிறது. [4] [10]

உணவு[தொகு]

முதல் நிலை வளர்ச்சியில் இருக்கும் டார்பான்கள் உணவுக்காகத் தீவனங்களை உண்பதில்லை. மாறாக கடல் நீரிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுகளைப் பயன்படுத்தி உறிஞ்சுகின்றன. இரண்டாம், மூன்றாம் நிலைகளில் இவை முதன்மையாக கடல் மிதவை நுண்ணுயிரிகளை உணவாக கொள்கின்றன. என்றாலும் பூச்சிகள் மற்றும் சிறிய மீன்களையும் உண்கிறன. இவை இளம் மீன்களாக வளரும்போது, குறிப்பாக நன்னீர் சூழலில் வளரும் போது, பூச்சிகள், மீன், நண்டு, புல் இறால் ஆகியவற்றை பிடித்து உண்கின்றன. பெரிய மீன்களான நடுத்தர அளவுள்ள இரைகளை இரவில் வேட்டையாடி உண்கிறன. இவை இரையை அப்படியே விழுங்குபவை. [6] [7]

எதிரிகள்[தொகு]

மேகலோப்களை முதல் கட்டம் மற்றும் ஆரம்ப கட்டம் ஆகிய இரண்டு வளர்ச்சியின் போது மற்ற மீன்கள், அவற்றின் அளவைப் பொறுத்து வேட்டையாடுகின்றன. அடுத்து குஞ்சு மெகாலாப்ஸ்களை பிஸ்ஸிவோரஸ் பறவைகள் ஆகியவற்றால் வேட்டையாடப்படுகின்றன. இவை காற்றுக்காக மேற் பரப்புக்கு வரும்போது விரால் அடிப்பான் ஆஸ்பிரேஸ் அல்லது பிற கொன்றுண்ணிப் பறவைகளால் பாதிக்கப்படக்கூடியவை. [11] வளர்ந்த மீன்கள் எப்போதாவது சுறாக்கள், முதலை போன்றவற்றிற்கு இரையாகிறன. இவை மனிதர்களால் உண்ணப்படுவதில்லை. அதனால் இவை தூண்டிலில் பிடிபட்டாலும், மீண்டும் கடலிலேயே வீசப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

 1. Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2008-01-08. 
 2. "Megalops Lacépède 1803 (ray-finned fish)". https://paleobiodb.org/classic/basicTaxonInfo?taxon_no=35338. 
 3. Part 7- Vertebrates. http://mave.tweakdsl.nl/tn/genera7.html. பார்த்த நாள்: 30 June 2016. 
 4. 4.0 4.1 4.2 " Megalops atlanticus", www.fishbase.org, 11 February 2010.
 5. 5.0 5.1 " Megalops cyprinoides", www.fishbase.org, 11 February 2010.
 6. 6.0 6.1 6.2 6.3 Zale, Alexander and Merrifield, Susan G. " Life History and Environmental Requirements of Coastal Fishes and Invertebrates."
 7. 7.0 7.1 Wade, Richard Archer.
 8. "Megalops Tarpon Information". https://www.fossilguy.com/gallery/vert/fish-teleosts/megalops/megalops.htm. 
 9. Martin-Medrano, L.. Studies on Mexican Paleontology. 
 10. Tsukamoto Y., Okiyama, M. "Metamorphosis of the Pacific Tarpon, Megalops Cyprinoides (Elopiformes, Megalopidae) with Remarks on Development Patterns in the Elopomorpha."
 11. Rickards, William L. "Ecology and Growth of Juvenile Tarpon, Megalops atlanticus, in a Georgia Salt Marsh."

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்பன்&oldid=3584865" இருந்து மீள்விக்கப்பட்டது