உள்ளடக்கத்துக்குச் செல்

டார்ட்ரோனிக் செமியால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டார்ட்ரோனிக் செமியால்டிகைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டார்ட்ரோனால்டிகைடிக் அமிலம்
2-ஐதராக்சி-3-ஆக்சோபுரோப்பனாயிக் அமிலம்
பார்மைல்(ஐதராக்சி)அசிட்டிக் அமிலம்
ஐதராக்சிமெலோனால்டிகைடிக் அமிலம்
இனங்காட்டிகள்
2480-77-5 Y
ChEBI CHEBI:16992
ChemSpider 1090
InChI
  • InChI=1S/C3H4O4/c4-1-2(5)3(6)7/h1-2,5H,(H,6,7)
    Key: QWBAFPFNGRFSFB-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01146
பப்கெம் 1122
  • C(=O)C(C(=O)O)O
பண்புகள்
C3H4O4
வாய்ப்பாட்டு எடை 104.06 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

டார்ட்ரோனிக் செமியால்டிகைடு (Tartronic acid semialdehyde) என்பது C3H4O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். OCHCH(OH)CO2H என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். இந்த மூலக்கூறில் ஆல்டிகைடு, ஆல்ககால் மற்றும் கார்பாக்சிலிக் அமிலம் ஆகிய மூன்று வேதி வினைக்குழுக்கள் இடம்பெற்றுள்ளன. டார்ட்ரோனிக் செமியால்டிகைடு ஒரு வெண்மை நிறத் திண்மப் பொருளாகும். இயற்கையாகவே இச்சேர்மம் காணப்படுகிறது. ஏறக்குறைய நடுநிலை காரகாடித்தன்மைச் சுட்டெண் மதிப்பில் நீரேற்றப்பட்ட கார்பாக்சிலேட்டு (HO)₂CHCH(OH)CO₂⁻ ஆக காணப்படுகிறது. இது டார்ட்ரோனேட்டு செமியால்டிகைடு என்று அழைக்கப்படுகிறது. ஒளிச்சுவாச வினையில் ஓர் இடைநிலை விளைபொருளாகப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒளிச்சுவாச வினையானது ஒளிச்சேர்க்கையுடன் போட்டியிடும் ஒரு விரும்பத்தகாத பக்கவினையாகும். இரண்டு கிளையாக்சிலேட்டு அலகுகளின் ஒடுக்கம் மூலம் உயிரியல் ரீதியாக டார்ட்ரோனிக் செமியால்டிகைடு உற்பத்தி செய்யப்படுகிறது:[1]

2 OC(H)CO2H → OC(H)CH(OH)CO2H + CO2

இந்த ஒடுக்க வினை டார்ட்ரோனேட்டு-செமியால்டிகைடு சிண்டேசு என்ற நொதியால் வினையூக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A Welcome Diversion from Photorespiration". Nature Biotechnology 25 (5): 539–40. May 2007. doi:10.1038/nbt0507-539. பப்மெட்:17483837. https://archive.org/details/sim_nature-biotechnology_2007-05_25_5/page/538.