டார்சென் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டார்சென் வினை (Darzens reaction) என்பது ஒரு கீட்டோன் அல்லது ஆல்டிகைடு ஒரு காரத்தின் முன்னிலையில் α- ஆலோவெசுத்தருடன் வினை புரிந்து α,β எப்பாக்சி எசுத்தர் உண்டாகின்ற வினையாகும். இவ்வினை டார்சென் குறுக்க வினை அல்லது கிளைசைடு எசுத்தர் குறுக்கவினை என்றும் அழைக்கப்படுகிறது[1][2][3]. கரிம வேதியியலாளர் அகசுதெ சியார்சு டார்சென் 1904 ஆம் ஆண்டு முதன் முதலில் இவ்வினையைக் கண்டறிந்தார்[4][5][6]

Darzens reaction overview.png

வினை வழிமுறை[தொகு]

ஆலசனேற்றம் பெற்ற இடத்தில் வலிமையான காரத்தைப் பயன்படுத்தி கார்பனயன் உருவாக்குவதில் வினைச்செயல்முறையானது தொடங்குகிறது[3] . ஏனெனில் எசுத்தராக இருப்பதால், இக்கார்பனயன் ஒத்ததிர்வு முறையால் நிலைபெற்ற ஈனோலேட்டாக விளங்குவதால், கார்பனயன் உருவாவதற்கு எளிமையாக இருக்கும். இந்த அணுக்கருகவர் அமைப்பு மற்றொரு கார்பனைல் பாகத்தை தாக்கி ஒரு புதிய கார்பன் – கார்பன் பிணைப்பை உருவாக்குகிறது. இவ்விரண்டு படிகளும் காரத்தை அடிப்படையாகக் கொண்ட வினையூக்க ஆல்டால் வினையை ஒத்துள்ளது. ஆக்சிசன் எதிர்மின் அயனி ஓர் ஆல்டாலாக செயலாற்றி மூலக்கூற்றிடை SN2 வினையின் மூலம் , முன்னதாக ஆலசனேற்றம் பெற்ற இடத்தில் உள்ள ஆலசனை இடப்பெயர்ச்சி செய்து ஓர் எப்பாக்சைடை உருவாக்குகிறது[2]. இவ்வினையின் போக்கு ஒரு குறுக்க வினையாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இரண்டு வினைபடு பொருட்களின் மூலக்கூறுகள் வினைபுரிவதால் ஒட்டுமொத்தமாக ஒரு HCl குறைவு தோன்றுகிறது.

Darzensepoxide.png

தொடக்கநிலை புரோட்டான் நீக்கம் தோன்றுவதை ஊக்குவிப்பதுதான் இங்கு எசுத்தரின் முதன்மையான வேலையாகும். மற்றும் இதற்காக அடுத்த கார்பனைல் தொகுதியை மாற்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும். தொடக்கநிலை பொருளானது α-ஆலோ அமைடாக இருக்குமானால் விளைபொருள் α,β- எப்பாக்சி அமைடாக இருக்கும்[7]. ஒருவேளை தொடக்கப் பொருளாக α- ஆலோ கீட்டோன் பயன்படுத்தப்பட்டால் விளைபொருள் α,β- எப்பாக்சி கீட்டோன் உருவாகும்[2].

தொடக்கநிலை புரோட்டான் நீக்கத்திற்காக வேறு பொருத்தமான ஏதாவது ஒரு காரத்தைப் பயன்படுத்த முடியும். இருந்தபோதிலும் இத்தொடக்கப்பொருள் ஓர் எசுத்தராக இருந்தால் , எசுத்தரின் பக்கச் சங்கிலியான அல்காக்சைடு, சாத்தியமான அசைல் பரிமாற்றத்தின் பக்கவிளைவுகளால் ஏற்படும் பிரச்சினைகளைப் பொதுவாகத் தடுக்கும் பொருட்டு அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Newman, M. S; Magerlein, B. J (1949). "The Darzens Glycidic Ester Condensation". Organic Reactions 5 (10): 413–440. doi:10.1002/0471264180.or005.10. 
  2. 2.0 2.1 2.2 Jie Jack Li (2006). "Darzens glycidic ester condensation". Name Reactions (3rd. expanded ). Springer-Verlag. பக். 183–184. doi:10.1007/3-540-30031-7. http://www.springerlink.com/content/v764410x2k2117h7. 
  3. 3.0 3.1 Ballester, Manuel (April 1955). "Mechanisms of The Darzens and Related Condensations Manuel Ballester". Chemical Reviews 55 (2): 283–300. doi:10.1021/cr50002a002. 
  4. Darzens, G. (1904). "Method generale de synthese des aldehyde a l'aide des acides glycidique substitues" (in French). Compt. Rend. 139: 1214. 
  5. Darzens, G. (1905). "Methode generale de synthese des d'esters glycidiques αβ substitues et de cetones" (in French). Compt. Rend. 141: 766. 
  6. Darzens, G. (1906). "Condensation glycidique des aldehydes avec l'ether alpha-chloropropionique" (in French). Compt. Rend. 142: 214. 
  7. Tung, C. C.; Speziale, A. J.; Frazier, H. W. (June 1963). "The Darzens Condensation. II. Reaction of Chloroacetamides with Aromatic Aldehydes". The Journal of Organic Chemistry 28 (6): 1514–1521. doi:10.1021/jo01041a018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டார்சென்_வினை&oldid=2747302" இருந்து மீள்விக்கப்பட்டது