டாம் வில்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாமஸ் வெண்ட்வொர்த் வில்ஸ் (Thomas Wentworth Wills (19 ஆகஸ்ட்,1835 – 2 மே,1880) முன்னாள் ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். ஆத்திரேலிய கால்பந்து விதிகளை வகுத்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். நியூ சவுத் வேல்சில் உள்ள பிரிட்டிஷ் காலனியில் ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை ஓர் அரசியல்வாதி மற்றும் ஆயர் ஆவார். இவரின் தந்தையின் சொத்துக்கள் இருந்த ஹொரோடியோ வில்சில் வாழ்ந்து வந்தார். தற்போது அந்தப் பகுதி ஆத்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில் உள்ளது. அங்குள்ள உள்ளூர்ப் பழங்குடியின மக்களிடம் நட்புடன் பழகி அங்குள்ள மொழிகளைக் கற்றுக் கொண்டார்.இவருக்கு பதினான்கு வயதாக இருக்கும் போது இங்கிலாந்தில் உள்ள ரக்பி பள்ளியில் பயின்றார். அங்கு துடுப்பாட்ட அணியின் தலைவராகவும் இருந்தார். அதன் பின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக துடுப்பாட்ட சங்கத்திற்காக ஆக்ஸ்போர்டு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். மேலும் மரிலெபோர்ன் துடுப்பாட்ட சங்கம் மற்றும் கெண்ட் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.இவரின் தனித்துவமான பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்தில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக அறியப்பட்டார்.

1856 ஆம் ஆண்டில் விக்டோரியா அணிக்குத் திரும்பி அதன் தலைவராக விளையாடினார். காலணிகளுக்கு இடையிலான பல போட்டிகளில் இவரின் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. 1858 ஆம் ஆண்டில் கால்பந்து துடுப்பாட்ட சங்கம் அமைப்பதற்காகவும் அதற்கான விதிமுறைகளை வகுப்பதற்காகவும் இவர் அழைக்கப்பட்டார். 1859 ஆம் ஆண்டில் ஆத்திரேலியவில் " மெல்போர்ன் கால்பந்து துடுப்பாட்ட சங்கம் " உருவானது. அதன் விதிகளை உருவாக்கிய குழுவில் இவரும் இருந்தார். இவரும் இவரின் உறவினர் எச். சி. ஏ. ஹாரிசனும் அந்த விளையாட்டினை வளர்ச்சி பெறச் செய்வதற்காக தலைவராகவும், நடுவர்கள் மற்றும் நிர்வாகிகளாகவும் பணியாற்றினர்.

வலதுகை மட்டையாளரும் வலதுகை மித வேகப் பந்துவீச்சாளருமான இவர் கேம்பிரிட்ஜ் துடுப்பாட்ட அணி, கெண்ட் மாகாணத் துடுப்பாட்ட அணி மற்றும் ஸ்பென்சர் வில்ஸ் துடுப்பாட்ட அணி ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை 37 முதல் தரத் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 602 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் ஒரு ஐம்ப்து ஓட்டங்களும் அடங்கும். பந்துவீச்சில் 1200 ஓட்டங்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்து 130 இலக்கௌகளைக் கைப்பற்றியுள்ளார். அவரின் பந்துவீச்சு சராசரி 0.09 ஆக இருந்தது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

வில்ஸ் ஆகஸ்ட் 19, 1835 இல் பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தில் இருந்த மொலொன்கலோ சமவெளியில் பிறந்தார். தற்போது இந்த இடம் ஆத்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்சில் உள்ளது. இவரின் பெற்றோரான ஹொரோசியோ மற்றும் எலிசபெத்திற்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[1]

ரக்பி பள்ளி[தொகு]

பெப்ரவரி 1850 ஆம் ஆண்டில் இவரின் தந்தை இவருக்குப் பதினான்கு வயதாக இருக்கும் போது இங்கிலாந்திற்கு அனுப்பினார். இங்கிலாந்தின் பெருமைமிகு பள்ளியாகக் கருதப்பட்ட ரக்பி பள்ளியில் பயின்றார்.பின் ஐந்து மாதத்திற்குப் பிறகு கடற் பயனம் செய்வதற்காக இவர் இலண்டன் சென்றார். இவரின் பள்ளி விடுமுறைக் காலங்களில் இவரின் அத்தை வீட்டில் தங்கினார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.

சான்றுகள்[தொகு]

  1. Mandle 1976.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_வில்சு&oldid=2815473" இருந்து மீள்விக்கப்பட்டது