டாம் ஜோபிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்டானியோ கார்லோசு ஜோபிம்
Antônio Carlos Jobim (cropped).jpg
1994இல் அன்டானியோ பிராசிலேரோபதிவு
இடைவேளையின் போது ஜோபிம் இளைப்பாறுகையில்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அன்டானியோ கார்லோசு பிராசிலேரோ டி அல்மீடா ஜோபிம்
பிற பெயர்கள்அன்டானியோ கார்லோசு ஜோபிம், டாம் ஜோபிம், டாம் டொ வினிசியசு
பிறப்புசனவரி 25, 1927(1927-01-25)
இரியோ டி செனீரோ, பிரேசில்
இறப்புதிசம்பர் 8, 1994(1994-12-08) (அகவை 67)
நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
இசை வடிவங்கள்போசா நோவா, இலத்தீன ஜாசு, சாம்பா, பிரேசிலியப் பரவலிசை (MPB)
தொழில்(கள்)இசைக்கலைஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர்
இசைக்கருவி(கள்)பியானோ, கிட்டார், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1956–94
வெளியீட்டு நிறுவனங்கள்வெர்வ், வார்னர் பிரோசு, எலென்கோ, ஏ&எம், சிடிஐ, எம்சிஏ, பிலிப்சு, டெக்கா, சோனி
இணைந்த செயற்பாடுகள்வினிசியசு டி மோரேசு, அலோசியோ டி ஓலிவீரா, யுவாவு கில்பெர்டோ, அசுத்ருடு கில்பெர்டோ, இசுடான் கெட்சு, பிராங்க் சினாட்ரா, எல்லா பிட்செரால்டு, இசுடிங், கால் கோசுட்டா
இணையதளம்www2.uol.com.br/tomjobim

அன்டானியோ கார்லோசு பிராசிலேரோ டி அல்மீடா ஜோபிம் ( Antônio Carlos Brasileiro de Almeida Jobim, சனவரி 25, 1927 – திசம்பர் 8, 1994), பரவலாக டாம் ஜோபிம் (Tom Jobim), பிரேசிலிய பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் இசைகருவித் தொகுப்பாளரும் பாடகரும் பியனோ/கிடார் கலைஞரும் ஆவார். பாசா நோவா என்ற இசைப் பாணியின் உருவாக்கத்திற்குப் பின்னிருந்த முதன்மை விசையாகவும் விளங்கினார். இவரது பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை பிரேசிலிலும் பன்னாட்டளவிலும் பல பாடகர்களும் இசைக்கருவிக் கலைஞர்களும் நிகழ்த்தி வருகின்றனர்.

இரியோடிசெனீரோவின் புறநகரப் பகுதி இபனேமாவை மையப்படுத்திய இபனேமாவின் பெண் ("Garota de Ipanema") என்ற பாடலுக்கு இசையமைத்ததிற்காக பெரிதும் அறியப்படுகின்றார். வினிசியசு டி மோரேசு எழுதி இவர் இசையமைத்த இந்தப் பாடல் வரலாற்றிலேயே மிக அதிகமாக பதிவுசெய்யப்பட்ட பாடலாக விளங்குகின்றது. ஜோபிம் இசையமைத்த பல பாடல்கள் இன்று ஜாஸ் மற்றும் பரப்பிசை தொகுப்புகளின் சீர்தரப் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளன. "கரோட்டா டி இபனேமா" பாடல் மட்டுமே மற்றபிற கலைஞர்களால் 240 முறை பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_ஜோபிம்&oldid=3292640" இருந்து மீள்விக்கப்பட்டது