டாமன்சாரா சாலை
| டாமன்சாரா சாலை Jalan Damansara | |
|---|---|
| முக்கிய சந்திப்புகள் | |
| வடக்கு முடிவு: | பண்டார் செரி டாமன்சாரா |
| மத்திய வட்டச் சாலை 1 மாரோப் சாலை | |
| தென்மேற்கு முடிவு: | சுல்தான் இசாமுடின் சாலை |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | பண்டார் செரி டாமன்சாரா தாமான் துன் டாக்டர் இசுமாயில் டாமன்சாரா நகர மையம் டாமன்சாரா அயிட்ஸ் புக்கிட் பெர்செக்குத்துவான் கோலாலம்பூர் சென்ட்ரல் |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
டாமன்சாரா சாலை (மலாய்; ஆங்கிலம்: Jalan Damansara; சீனம்: 白沙罗路 என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் அமைந்துள்ள ஒரு முக்கியமான நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1- இல் உள்ள மலேசிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான மாற்றுச் சாலையுடன் சிகாம்புட் நகர்ப் பகுதிகளை இணைக்கிறது.
கோலாலம்பூர் மாநகரத்தின் பழைமையான சாலைகளில் ஒன்றான டாமன்சாரா சாலை, தற்போது பெட்டாலிங் ஜெயாவின் டாமன்சாரா பிரிவுகளுக்கும் கோலாலம்பூருக்கும் இடையிலான இணைப்புச் சாலையாகச் செயல்படுகிறது.
பெயர்
[தொகு]கிள்ளான் ஆற்றுப் படுகையில் டாமன்சாரா ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு சிறிய துறைமுகக் குடியேற்றத்தின் பெயரால் டாமன்சாரா சாலைக்குப் பெயரிடப்பட்டது.[1]
டாமன்சாரா என்ற பெயர் ஓர் இந்தியப் பெயராக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. இந்தி மொழியில், டாமன் என்றால் "மலையடிவாரம்" என்றும்; சாரா என்றால் "செல்வ மாளிகை" அல்லது சமசுகிருதத்தில் "நீர்" என்றும் பொருள்படும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gullick, J.M. (June 1990). "The Growth of Kuala Lumpur and the Malay Communities in Selangor Before 1880". Journal of the Malaysian Branch of the Royal Asiatic Society LXIII (1): 23–24. http://myrepositori.pnm.gov.my/bitstream/123456789/4317/1/JB1869_GOKL.pdf.
- ↑ Isa, Mariana; Kaur, Maganjeet (15 September 2015). Kuala Lumpur Street Names: A Guide To Their Histories and Meanings. Singapore: Marshall Cavendish International Asia Pte Ltd. p. 82. ISBN 9789814721448.
