உள்ளடக்கத்துக்குச் செல்

டாமன்சாரா அயிட்ஸ்

ஆள்கூறுகள்: 03°09′15.69″N 101°39′30.93″E / 3.1543583°N 101.6585917°E / 3.1543583; 101.6585917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாமன்சாரா அயிட்ஸ்
கோலாலம்பூர் புறநகர்
Damansara Heights
Bukit Damansara
புக்கிட் டாமன்சாரா
புக்கிட் டாமன்சாரா
Map
ஆள்கூறுகள்: 03°09′15.69″N 101°39′30.93″E / 3.1543583°N 101.6585917°E / 3.1543583; 101.6585917
நாடு மலேசியா
மாநிலம் மலேசிய கூட்டரசு பிரதேசம்
மாவட்டம்சிகாம்புட்
மாநகராட்சிகோலாலம்பூர்
நேர வலயம்மலேசிய நேரம் 08:00
அஞ்சல் குறியீடு
50490[1]
தொலைபேசி+603 8321

டாமன்சாரா அயிட்ஸ் அல்லது புக்கிட் டாமன்சாரா, (ஆங்கிலம்: Damansara Heights; மலாய்: Bukit Damansara; சீனம்: 白沙罗高原); என்பது மலேசியா, கோலாலம்பூர், சிகாம்புட் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஓர் உயர்ரக புறநகர்ப் பகுதி ஆகும். கோலாலம்பூர் பெருநகர மையத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்தப் புறநகர்ப் பகுதி சிகாம்புட் மாவட்டம் மற்றும் அதன் சிகாம்புட் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. இந்த இடம் கிள்ளான் பள்ளத்தாக்கில் மிகவும் விரும்பப்படும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாகும்.

பின்னணி

[தொகு]

கோலாலம்பூர் மற்றும் பெட்டாலிங் ஜெயாவிலிருந்து டாமன்சாரா அயிட்ஸ் புறநகர்ப் பகுதியை அணுகலாம். பங்சாரில் உள்ள ஜாலான் மாரோப் (Jalan Maarof) எனும் முக்கிய சாலை; ஜாலான் டாமன்சாரா (Jalan Damansara) எனும் டாமன்சாரா சாலையை இணைக்கிறது. மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் இருந்து டாமன்சாரா அயிட்ஸ் பகுதிக்குள் செலல் ஜாலான் டூத்தா (Jalan Duta) மற்றும் ஜாலான் செமந்தான் (Jalan Semantan) சாலைகளைப் பயன்படுத்தப்படலாம். மலேசியாவில் சாலைகளை ஜாலான் (Jalan) என்று அழைப்பது பொதுவான வழக்கமாகும்.

இரண்டு மாடி இணைப்பு வீடுகளைக் கொண்ட மேடான் டாமன்சாரா சுற்றுப்புறம் 1972-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புத் திட்டமாகத் தொடங்கப்பட்டது. இந்த உறைவிடப் பகுதியில் கல்லூரிகள், பெரிய பன்னாட்டு நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் அரசுத் துறைகள் உள்ளன.[2]

டாமன்சாரா அயிட்ஸ் பகுதியில் கட்டப்பட்ட முதல் அலுவலகக் கட்டிடம் விஸ்மா டாமன்சாரா ஆகும். இது 1970-ஆம் ஆண்டு சிலாங்கூர் சொத்துடைமை நிறுவனத்தால் (Selangor Properties) கட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து டுங்குன் சாலையில் உள்ள டாமன்சாரா அலுவலக வளாகம் கட்டப்பட்டது. அந்தக் கட்டத்தில் உள்ளூர் பங்குச் சந்தையான மலேசிய பங்குச் சந்தையும் அங்கு இருந்தது.

போக்குவரத்து

[தொகு]

பொது போக்குவரத்து

[தொகு]

டாமன்சாரா அயிட்ஸ் புறநகர்ப்பகுதி 9 காஜாங் வழித்தடத்தின் இரண்டு நிலையங்களால் சேவை செய்யப்படுகிறது:

ஊர்தி

[தொகு]

இசுபிரிண்ட் விரைவுச்சாலை E23, வடகிழக்கு-தென்மேற்கு திசையில் டாமன்சாரா அயிட்ஸ் புறநகர்ப்பகுதி வழியாகச் செல்கிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Damansara Heights, Kuala Lumpur - Postcode - 50490 - Malaysia Postcode". postcode.my. Retrieved 14 September 2025.
  2. "The best restaurants in Damansara Heights, Kuala Lumpur".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாமன்சாரா_அயிட்ஸ்&oldid=4342589" இலிருந்து மீள்விக்கப்பட்டது