டாமன்சாரா–சா ஆலாம் உயர்மட்ட விரைவுச்சாலை
| டாமன்சாரா–சா ஆலாம் உயர்மட்ட விரைவுச்சாலை | |
|---|---|
| Damansara–Shah Alam Elevated Expressway Lebuhraya Bertingkat Damansara–Shah Alam | |
![]() டாமன்சாரா–சா ஆலாம் உயர்மட்ட விரைவுச்சாலை | |
சுபாங் வானூர்தி நிலையம் - குவாசா டாமன்சாரா மாற்றுவழி | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பராமரிப்பு Prolintas - Shah Alam Sdn Bhd (DASH) | |
| வரலாறு: | கட்டுமானம் தொடக்கம்: 2015 கட்டுமானம் முடிவு: 2222 |
| முக்கிய சந்திப்புகள் | |
| மேற்கு முடிவு: | புஞ்சாக் பெர்தானா |
| கோத்தா டாமன்சாரா; சுபாங்; சுபாங் வானூர்தி நிலையம் | |
| கிழக்கு முடிவு: | பெஞ்சாலா மாற்றுச்சாலை |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
டாமன்சாரா–சா ஆலாம் உயர்மட்ட விரைவுச்சாலை அல்லது கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய வடக்கு விரைவுச்சாலை
(ஆங்கிலம்; Damansara–Shah Alam Elevated Expressway (DASH); அல்லது New North Klang Valley Expressway மலாய்: Lebuhraya Bertingkat Damansara–Shah Alam) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு விரைவுச்சாலையாகும். இந்த விரைவுச்சாலையின் மதிப்பீட்டுச் செலவு MYR 11.5 பில்லியன் ஆகும்.[2]
வழிப் பின்னணி
[தொகு]புஞ்சாக் பெர்தானா U10 சா ஆலாம் மாற்றுச் சாலை சந்திப்பு முனையில் (Puncak Perdana U10 Shah Alam), டாமன்சாரா–சா ஆலாம் உயர்த்தப்பட்ட விரைவுச்சாலையின் 0 (சுழிய) கிலோமீட்டர் அமைந்துள்ளது. இது புஞ்சாக் பெர்தானா (Puncak Perdana), ஆலாம் சூரியா, தெனாய் ஆலாம், கம்போங் மெலாயு சுபாங், சுங்கை பூலோ சாலை, மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம், கோத்தா டாமன்சாரா, டாமன்சாரா பெர்தானா மற்றும் முத்தியாரா டாமன்சாரா ஆகியவற்றுக்கான இணைப்பாகச் செயல்படுகிறது.
வரலாறு
[தொகு]சா ஆலாம் மற்றும் பத்து ஆராங் சாலை (பெர்சியாரான் மொக்தார் தகாரி Persiaran Mokhtar Dahari) இணைப்புகளில் அதிகரித்து வந்த மேம்பாடுகள் சாலைத் திறனை அதிகரிக்க வேண்டிய நிலையை உருவாக்கின. எனவே, அந்தத் தேவைகளைப் நிறைவு செய்யும் வகையில் ஒரு விரைவுச்சாலை கட்டப்பட வேண்டும் என்று புரோலிந்தாஸ் நிறுவனம் (Permodalan Nasional Berhad) முன்மொழிந்தது.
இந்த விரைவுச்சாலை கோத்தா டாமன்சாராவில் உள்ள பெர்சியாரான் சூரியன் சாலைக்கும் சுபாங் வானூர்தி நிலையத்திற்கும் மாற்றுப் பாதையாக அமைகிறது. அத்துடன், கிள்ளான் பள்ளத்தாக்கின் கிழக்கு மேற்கு பகுதிகளுக்கு இடையிலான இணைப்பாகவும் செயல்படுகிறது.
இசுபிரிண்ட் விரைவுச்சாலை
[தொகு]இந்த விரைவுச் சாலை கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச் சாலையைக் கடந்து செல்கிறது. மேலும் கத்ரி பெருவழி விரைவுச்சாலை (Guthrie Corridor Expressway),
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை மற்றும்
இசுபிரிண்ட் விரைவுச்சாலை போன்ற விரைவுச் சாலைகளை இணைக்கிறது.
இப்பகுதியில் உள்ள மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுமான மேம்பாடுகளினால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. அவற்றைத் தீர்க்க இந்த விரைவுச் சாலை பெரிதும் உதவுகிறது. 2022 அக்டோபர் 13 அன்று தெனாய் ஆலாம் சுங்கச்சாவடியில் புரோலிந்தாஸ் நிறுவனம், இந்த விரைவுச் சாலையின் திறப்பு விழாவை நடத்தியது.
மேலும் விரைவுச் சாலை 2022 அக்டோபர் 14 அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட தேதியிலிருந்து 2022 நவம்பர் 30 வரை 40 நாட்களுக்கு போக்குவரத்து கட்டணம் விதிக்கப்படவில்லை.[3] இந்த திட்டத்திற்கு 2015 மலேசிய வரவு செலவுத் திட்டத்தில் MYR 4.2 பில்லியன் ஒதுக்கப்பட்டது.
சுங்கக் கட்டணங்கள்
[தொகு]திசம்பர் 1, 2022 தொடக்கம், இந்த விரைவுச்சாலையின் அனைத்து சுங்கச் செயல்பாடுகளும் Touch 'n Go தொட்டு செல் அட்டைகள் அல்லது SmartTAG இசுமார்ட் அட்டைகள் (SmartTAG) மூலம் மின்னணு முறையில் நடத்தப்படுகின்றன. ரொக்கப் பணம் ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.
| பிரிவு | வாகனங்களின் வகை | கட்டணம் (மலேசிய ரிங்கிட் RM) |
|---|---|---|
| 0 | விசையுந்துகள் | இலவசம் |
| 1 | வாடகை வாகங்களைத் தவிர்த்து, 2 அச்சுகள் மற்றும் 3 அல்லது 4 சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் | RM 2.30 |
| 2 | பேருந்துகளைத் தவிர்த்து, 2 அச்சுகள் மற்றும் 5 அல்லது 6 சக்கரங்களைக் கொண்ட வாகனங்கள் | RM 4.60 |
| 3 | 3 அல்லது அதற்கு மேற்பட்ட அச்சுகளைக் கொண்ட வாகனங்கள் | RM 6.90 |
| 4 | வாடகை உந்துகள் | RM 1.20 |
| 5 | பேருந்துகள் | RM 2.30 |
மேலும் காண்க
[தொகு]- கோத்தா டாமன்சாரா
- குவாசா டாமன்சாரா
- டாமன்சாரா பெர்தானா
- முத்தியாரா டாமன்சாரா
- மலேசிய இரப்பர் ஆராய்ச்சி நிறுவனம்
- சுபாங் வானூர்தி நிலையம்
காட்சியகம்
[தொகு]டாமன்சாரா–சா ஆலாம் உயர்மட்ட விரைவுச்சாலை காட்சிப் படங்கள் (2022)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malaysia Federal Legislation". lom.agc.gov.my. Retrieved 2025-10-17.
- ↑ "No approval for Damansara-Shah Alam highway yet, Selangor rep says". Malay Mail.
- ↑ "RRIM rubber estate to make way for development". The Star (Malaysia). Retrieved 15 October 2018.

