டாப்ஸன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாப்ஸன்

        டாப்ஸன் என்பது ஓசோன் அடுக்கில் ஏற்பட்டுள்ள ஓட்டையின் அளவைக் கண்டறியப் பயன்படும் ஒரு அலகு ஆகும் . ஓசோன் அடுக்கு என்பது பூமியின் ஸ்ட்ராடோஸ்பியர் என்ற அடுக்கில் காணப்படும் . பொதுவாக ஓசோன் அடுக்கானது சூரியனின் இருந்து வரும் புறஊதா மற்றும் அகச்சிவப்பு கதிர்களின் அதிக வெப்பத்தைக் குறைத்து பூமியைப் பாதுகாத்து வருகிறது. ஓசோன் அடுக்கு பூமியை காக்கும் ஒரு சிறந்த அடுக்காக பாதுகாத்து வருகிறது . ஓசோன் அடுக்கில் உள்ள காற்று மண்டலத்தை பூமியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டினால் இந்த அடுக்கின் அடர்த்தியானது குறைந்து வருகிறது . இதுவே ஓசோனில் ஏற்பட்ட ஓட்டை என்று அழைக்கிறார்கள் .(1)
         டாப்ஸன் அலகானது ஓசோனில் உள்ள கந்தக டை ஆக்ஸைடு அளவின் அடர்த்தியை பொறுத்து அளவிடப்படுகிறது .ஓசோன் அடுக்கில் ஏற்படும் வெப்பநிலை மற்றும் அழுத்தத்திற்கான நிலையான நிலைகளில் 0.01 மில்லிமீட்டர் தடிமனான அடுக்கு உருவாவதற்கு தேவையான ஓசோன் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக்கு ஒரு டாப்ஸன் அலகானது அளவிடப்படுகிறது .
         முதன் முதலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் திரு .கோர்டன் டாப்ஸன் அவர்கள் 1920 ம் ஆண்டு தரையில் இருந்து ஓசோனை அளக்க கருவியை உருவாக்கி இரட்டை முடுக்க மோனோக்ரோமேட்டரைப் பயன்படுத்துவதன் மூலம் ஓசோனின் காற்று மண்டலத்தின் அடர்த்தி குறைவதை கண்டறிந்தார் .இவர் கண்டறிந்த கருவியே ஓசோன் ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர் என்று அழைக்கப்படுகிறது . டாப்ஸன் அலகானது முதன் முதலில் அண்டார்டிகா கண்டத்தில் 1984 ம் ஆண்டு அளவிடப்பட்டது. ஒரு டாப்ஸன் அலகு என்பது ஒரு சதுர மீட்டருக்கு 2.69 × 1020 மூலக்கூறுகள் ஆகும் . (4)
  மேற்கோள் நூல்கள் :
          1, ஓசோன் ஹோல் வாட்ச்: டாப்சன் யூனிட்ஸ் பற்றி உண்மைகள் , பக் 2
          2, கெமிக்கல் இன் கெமிக்கல் டெர்மினாலஜி, (1997)திருத்தப்பட்ட பதிப்பு: (2006-) "வளிமண்டல வேதியியல் உள்ள Dobson அலகு , பக் 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாப்ஸன்&oldid=2377113" இருந்து மீள்விக்கப்பட்டது