டாபோசா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருவ மழையின் போது டாபோசா அருவி

'டாபோசா அருவி (Dabhosa Waterfalls) இந்திய மாநிலமான மகாராட்டிர மாநிலத்தில் இருக்கும் பல்கார் மாவட்டம், சவகர் தாலுகாவில் உள்ள டபோசா என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருவியாகும்.  மும்பைக்கு அருகே  உள்ள உயர்ந்த அருவிகளில் இதுவும் ஒன்று ஆகும். லென்டி நதியின் மேல் அமைந்து 300 அடி  உயரத்திலிருந்து  வழிந்தோடி  வருகிறது. பருவமழைக்  காலத்தில்  இவ்வருவி பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். [1]

டாபோசா அருவி படகு சவாரி, மலைஏற்றம், பள்ளத்தாக்குகளைக் கடத்தல் மற்றும் மீன்பிடித்தல் போன்ற சாகச விளையாட்டுக்களுக்கு ஏற்ற இடமாகும். டபோசா அருவி விடுதி மற்றும் சவகர் மலைவாழிடம் ஆகியவை இவ்வருவிக்கு அருகே உள்ள தங்கும் விடுதிகளாகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.trawell.in/maharashtra/nashik/dabhosa-waterfall
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-20. பார்க்கப்பட்ட நாள் 2018-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாபோசா_அருவி&oldid=3783919" இலிருந்து மீள்விக்கப்பட்டது