உள்ளடக்கத்துக்குச் செல்

டாபுலேட்டிங் மெசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1890 ஆம் ஆண்டில், அமெரிக்க ஒன்றியத்தைச் சேர்ந்த எர்மன் ஓலரித் எனும் அறிஞர், அந்த ஆண்டிற்கான மக்கள்தொகை கணக்கெடுப்புகளை அட்டவணைப்படுத்திட, டாபுலேட்டிங் மெசின், எனும் மின்விசைமுறைக் கருவி ஒன்றை வடிவமைத்தார். இதில், துளை-அட்டைகளில் ஏற்றப்பட்டிருக்கும் தரவுகளை, நேர்த்தியாகப் படித்திடும் மின்காந்த விசைமுறை கருவி ஒன்றை வடிவமைத்திருந்தார். பின்நாட்களில் இங்கிலாந்து, செர்மனி, உருசியா போன்ற நாடுகளிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக இந்த கருவி பயன்படுத்தப்பட்டது. இவர் உருவாக்கிய ‘டாபுலேட்டிங் மெசின் கம்பெனி’ எனும் நிறுவனம்தான் பின்நாட்களில் ஐபியெம் எனும் பெரும் கணினி நிறுவனமாக உருவெடுத்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாபுலேட்டிங்_மெசின்&oldid=3582128" இலிருந்து மீள்விக்கப்பட்டது