உள்ளடக்கத்துக்குச் செல்

டான் சீ கூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டான் சீ கூன்
Tan Chee Khoon
மலேசியாவின் 2-ஆவது எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
1964–1969
ஆட்சியாளர்கள்பெர்லிஸ் புத்ரா
திராங்கானு சுல்தான் இசுமாயில் நசிருதீன்
பிரதமர்துங்கு அப்துல் ரகுமான்
முன்னையவர்புர்கானுதீன் அல்-எல்மி
பின்னவர்முகமது அசுரி மூடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-03-04)4 மார்ச்சு 1919
பாலக்கோங், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள், பிரித்தானிய மலாயா
இறப்பு14 அக்டோபர் 1996(1996-10-14) (அகவை 77)
கல்விமன்னர் எட்வர்ட் VII மருத்துவக் கல்லூரி (சிங்கப்பூர்)
பணிமருத்துவர்; அரசியல்வாதி

டான் சீ கூன் (ஆங்கிலம்; மலாய்: Tan Chee Khoon; சீனம்: 陈志勤) (4 மார்ச் 1919 – 14 அக்டோபர் 1996) என்பவர் 1959 முதல் 1978 வரை மலேசிய அரசியலில் ஒரு முக்கிய நபராக விளங்கினார். ஒரு கட்டத்தில் அவர் மலேசிய நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகக் கருத்துகளை முன்வைத்ததற்காக "திருவாளர் எதிர்க்கட்சி" என்று செல்லப்பெயர் பெற்றார். அவர் 1964 முதல் 1969 வரை மலேசிய நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

அவர் முதலில் மலாயா தொழிலாளர் கட்சி மற்றும் மலாயா மக்கள் சமூகவுடைமை முன்னணி (Malayan Peoples' Socialist Front) கூட்டணியின் தலைவராக இருந்தபோதிலும், அவர் பின்னர் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (கெராக்கான்); மற்றும் மலேசிய சமூக நீதிக் கட்சி (பெகெமாஸ்) கட்சிகளை; பிற தலைவர்களுடன் இணைந்து நிறுவினார்.[1] அவர் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (கெராக்கான்) கட்சியில் ஏமாற்றமடைந்த பிறகு மலேசிய சமூக நீதிக் கட்சி (பெகெமாஸ்) கட்சியை உருவாக்கினார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

1964-ஆம் ஆண்டில், கோலாலம்பூர், பத்து மக்களவைத் தொகுதியிலும், சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தொகுதியான கெப்போங் சட்டமன்றத் தொகுதியிலும் டான் சீ கூன் போட்டியிட்டார். 1964 மலேசியப் பொதுத்தேர்தலில் கூட்டணி எதிர்க்கட்சிகளைப் பெரிய அளவில் தோற்கடித்த போதிலும், டான் சீ கூன் இரண்டு இடங்களையும் வென்றார்.

மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், அரசாங்கக் கொள்கைகளை முழுமையாக ஆராய்ந்து தமது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்ததன் மூலம் டான் சீ கூன் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றார்.[2] இதன் காரணமாக "திருவாளர் எதிர்க்கட்சி" என்று பெயர் பெற்றார்.

மலேசிய அரசியலமைப்பில் வேண்டுமென்றே செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும், மலாயாவை (பின்னர் மலேசியா) ஓர் இசுலாமிய நாடாக நிறுவுவதற்கு எதிரான அவரின் வெளிப்படையான எதிர்ப்பிற்காகவும் டான் சீ கூன் நன்கு அறியப்பட்டார்.[3] அவர் தமது தொகுதி மக்கள் மீதான நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவரும் ஆவார். அவர் வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது தமது அலுவலகத்தில் தொகுதி மக்களுக்குத் தனிப்பட்ட வகையில் சேவைகள் செய்தார்.[4]

விருதுகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tan Sri Dr Tan Chee Khoon was head of the now defunct Labour Party, and co-founded Gerakan, and was one of the founders of Universiti Malaya". www.bfm.my (in ஆங்கிலம்). Retrieved 25 January 2026.
  2. Loh, Kok Kin (2003). "Tan Sri Dr Tan Chee Khoon – A Life of Service" பரணிடப்பட்டது 15 பெப்ரவரி 2006 at the வந்தவழி இயந்திரம். Retrieved 14 February 2006.
  3. Tan & Vasil, pp. XIII, XIV.
  4. Lee, Kenny Kian Yee (2003). "A History Forlorn". Retrieved 14 February 2006.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டான்_சீ_கூன்&oldid=4464517" இலிருந்து மீள்விக்கப்பட்டது