டான் கிரேவ்சு (வட்டெறிபவர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதக்க சாதனைகள்
டான் கிரேவ்சு (வட்டெறிபவர்)
டான் கிரேவ்சு (வட்டெறிபவர்)
ஆண்கள் தடகளம்
நாடு  பெரிய பிரித்தானியா
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2004 ஏதென்ஸ் வட்டெறிதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் சிட்னி வட்டெறிதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2012 இலண்டன் வட்டெறிதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2008 பெய்ஜிங் வட்டெறிதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 இரியோ டி செனீரோ வட்டெறிதல்
உலகப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2002 லீல் வட்டெறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 அசான் வட்டெறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011 கிறைஸ்ட்சேர்ச் வட்டெறிதல்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 லியோன் வட்டெறிதல்
ஐபிசி ஐரோப்பியப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் அசான் வட்டெறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2005யெஸ்ப்பூ வட்டெறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 சுவான்சீ வட்டெறிதல்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 கிரசெட்டோ வட்டெறிதல்
நாடு  இங்கிலாந்து
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 கிளாஸ்கோ வட்டெறிதல்

டேனியல் கிரீவ்சு (Daniel Greaves) (பிறப்பு: 1982 அக்டோபர் 4) இவர் பிரித்தனைச் சேர்ந்த ஓர் தடகள விளையாட்டு வீரர் ஆவார். அவர் வட்டெறிதலில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

சுயசரிதை[தொகு]

இவர் இங்கிலாந்தின் இலீசெஸ்டர்சையரின் அன்ஸ்டே என்ற நகரத்தில் 1982 இல் பிறந்தார். [1]

2004 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கில் எஃப் 44/46 வகை வட்டெறிதலில் இவர் தங்கப்பதக்கம் வென்றார். இவர், 55.12 மீட்டர் தூக்கி எறிந்து புதிய உலக சாதனையைப் படைத்தார். [2] முன்னதாக சிட்னியில் நடந்த 2000 கோடைகால இணை ஒலிம்பிக்கில் வெள்ளியை வென்றார். [3]

கால்களின் குறைபாட்டுடன் பிறந்த போதிலும், 2001 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியில் சேர இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த கோடைகால இணை ஒலிம்பிக்கில் இவர் போட்டியிட்டு, [4] எஃப்44 வகை வட்டெறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2011 சனவரியில் நியூசிலாந்தில் நடந்த ஐபிசி-க்கு முந்தைய உலக தடகளப் போட்டிகளில் போட்டியில் மீண்டும் உலக சாதனையை முறியடித்த இவர், தனது நான்காவது வீசுதலில் 59.98 மீட்டரைக் கடந்தார். [5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "British team for Athens 2004 பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம்", paralympics.org.uk, retrieved 2011-03-05
  2. "Greaves takes discus crown", BBC, 20 September 2004
  3. 3.0 3.1 "Unique double for Daniel Greaves", uksport.gov.uk, 17 August 2008
  4. "ParalympicsGB receive athletics nominations for the Beijing 2008 Paralympics" பரணிடப்பட்டது சூன் 9, 2011 at the வந்தவழி இயந்திரம், British Paralympics Association, June 2008
  5. "'Discus' Dan is a World Record Man", Anstey Clarion, February 2011, p. 1
  6. "IPC WORLDS: Greaves justifies his pre-event billing to take discus gold in New Zealand பரணிடப்பட்டது 2011-01-28 at the வந்தவழி இயந்திரம்", morethangames.co.uk, 26 January 2011, retrieved 2011-03-05