தாண்டலம் ஐந்தயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டாண்ட்டலம் ஐந்தயோடைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாண்டலம் ஐந்தயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாண்டலம்(V) அயோடைடு
இனங்காட்டிகள்
26814-38-0
பண்புகள்
Ta2I10
வாய்ப்பாட்டு எடை 1631
தோற்றம் கருப்புநிறத் திண்மம்
அடர்த்தி 5.8 கி/செ.மீ3
உருகுநிலை 543 °C (1,009 °F; 816 K) பதங்கமாகிறது.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாண்டலம் ஐந்தயோடைடு (Tantalum pentaiodide) என்பது Ta2I10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொன்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்துடன் ஈரக்காற்றில் வினைபுரியும் தன்மையுடன் எதிர்காந்தப் பண்பும் கொண்ட ஒரு திண்மமாக காணப்படுகிறது.

தொகுப்புமுறை தயாரிப்பு[தொகு]

உலோக தாண்டலத்துடன் அதிகப்படியான அயோடின் சேர்த்து வினைபடச் செய்து தாண்டலம் ஐந்தயோடைடு தயாரிக்கலாம். தாண்டலம் ஐந்தாக்சைடுடன் அலுமினியம் மூவயோடைடு சேர்த்து சூடுபடுத்தியும் இதைத் தயாரிக்கலாம்:[1]

3 Ta2O5 + 10 AlI3 → 3 Ta2I10 + 5 Al2O3

அமைப்பு[தொகு]

இதனுடைய படிக அமைப்பு எக்சு-கதிர் படிகவியல் ஆய்வால் உறுதி செய்யப்படுகிறது. விளிம்பில் பகிர்ந்து கொண்டுள்ள இரடை எண்முக அமைப்புகளுடன் இப்படிகம் அமைந்துள்ளது. இவ்வமைப்பே தாண்டலம் மற்றும் நையோபியம் தனிமங்களின் பல ஐந்தயோடைடுகளிலும் அறியப்படுகிறது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. G. Brauer "Hydrogen, Deuterium, Water" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 2. p. 1316.
  2. U. Müller "Die Kristallstruktur von Tantalpentajodid und ihre Fehlordnung" Acta Crystallographica, Section B 1979, volume 35, pp. 2502-9. எஆசு:10.1107/S0567740879009778
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாண்டலம்_ஐந்தயோடைடு&oldid=3384814" இலிருந்து மீள்விக்கப்பட்டது