உள்ளடக்கத்துக்குச் செல்

டாட்டா இண்டிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாட்டா இண்டிகா
Tata Indica
உற்பத்தியாளர்டாட்டா மோட்டார்ஸ்
உற்பத்தி1998–2018
பொருத்துதல்இந்தியா, மகாராட்டிரம், பிம்பிரி-சிஞ்ச்வடு
டாட்டா போல்ட்
வகுப்புசிறியவகை
திட்ட அமைப்புமுன்புற எஞ்சின்- முன் சக்கர செலுத்தி
2000 டாட்டா இண்டிகா

டாட்டா இண்டிகா (Tata Indica) என்பது 1998 ஆண்டு இந்திய நிறுவனமான டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சிறியவகை மகிழுந்து ஆகும். மேலும் டாட்டா மோட்டார்சின் சார்பில் முதன் முதலில் தயாரிக்கபட்ட மகிழுந்து வகையாக டாட்டா இண்டிகா மகிழுந்து அமைந்தது. இவை மாருதி மகிழுந்து வடிவமைப்பைப் பின்பற்றியே வடிவமைக்கப்பட்டது. இவ்வகை மகிழுந்தானது இந்தியாவில் பெரும்பாலும் தனியார் பயன்பாடு மற்றும் வாடகைத் தானுந்துப் பயன்பாட்டுக்காகப் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டது ஆகும். இவை 2008 ஆகத்து வரை 910,000 க்கும் அதிகமான அலகுகள் தயாரிக்கப்பட்டு இவ்வாகனங்களின் எண்ணிக்கை, 1.2 மில்லியனை நெருங்கியது.[1] இண்டிகாவின் வருடாந்திர விற்பனை 2006-07 ஆம் ஆண்டில் 144,690 அலகுகளாக இருந்தது.[2] 2009 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இண்டிகாவின் மாத விற்பனை சுமார் 8000 அலகுகள் இந்த மகிழுந்துகள் 2004 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.[3]. 2018 ஏப்ரல் முதல் இந்த மகிழுந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. [4]

வரலாறு[தொகு]

  • இவை 1998 ஆம் ஆண்டு திசம்பர் 30 ஆம் தேதி டாட்டா மோட்டார்ஸ் சார்பாக முதல் முறையாகத் தயாரிக்கபட்ட காராகவும் இண்டிகா மற்றும் இண்டிகோ அமைந்தது
  • இது முன்னர் டெல்கோ என அழைக்கப்பட்டது. இதன் தயாரிப்பு முழுவதும் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மகிழுந்து என்ற பெருமையுடன் டாட்டா இண்டிகாவை அறிமுகப்படுத்தியது:[5]
  • மேலும் 1999 இல் இது வெளிவந்த ஒரு வாரத்திற்குள் 115,000 வண்டிகளுக்கான கேட்புகளை நிறவனம் பெற்றது.[6] இரண்டு ஆண்டுகளுக்குள், இண்டிகா சந்தையில் முதலிடத்தைப் பிடித்தது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 22 November 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-01-31.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. Express News Service (28 August 2008). "All-new Indica rolled out in city". The Indian Express. Archived from the original on 29 September 2012. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010. {{cite web}}: More than one of |author= and |last= specified (help)
  3. "Tata Motors sales jump 18 pc in July". The Economic Times. 3 August 2009. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.
  4. Tata discontinues the Indica eV2 and Indigo eCS
  5. "விடைபெறுகிறது டாடா `இண்டிகா'". கட்டுரை. தி இந்து தமிழ். 28 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2018.
  6. "Rearview". Tata Motors. 26 April 2010. Archived from the original on 6 December 2010. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_இண்டிகா&oldid=3997478" இலிருந்து மீள்விக்கப்பட்டது