உள்ளடக்கத்துக்குச் செல்

டாங் வாங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாங் வாங்கி
Dang Wangi
டாங் வாங்கி நகர்ப்பகுதி
டாங் வாங்கி நகர்ப்பகுதி
Map
ஆள்கூறுகள்: 3°09′23.9″N 101°41′52.2″E / 3.156639°N 101.697833°E / 3.156639; 101.697833
நாடு மலேசியா
மாநிலம் கோலாலம்பூர்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
50100[1]
தொலைபேசி எண்+603-207
போக்குவரத்துப் பதிவெண்W ; V
இணையதளம்www.dbkl.gov.my

டாங் வாங்கி (மலாய்; ஆங்கிலம்: Dang Wangi; சீனம்: 买个董) என்பது மலேசியா, கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கிய நகர்ப்பகுதி ஆகும். இந்த நகர்ப்பகுதி மெர்டேக்கா சதுக்கத்திற்கு வடக்கே அமைந்துள்ளது.

மேலும் கோம்பாக் ஆறு; மற்றும் கிள்ளான் ஆறு ஆகிய ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த நகர்ப்பகுதியின் எல்லைகளாக புக்கிட் நானாஸ்; மற்றும் மேடான் துவாங்கு ஆகிய நகர்ப்பகுதிகள் உள்ளன.[2]

பொது

[தொகு]

டாங் வாங்கி எனும் பெயர் மலாக்கா வீரர் ஆங் ஜெபாட் (Hang Jebat) மனைவியின் பெயரில் இருந்து பெறப்பட்டது.[3] இருப்பினும் டாங் வாங்கி சாலை (மலாய்: Jalan Dang Wangi), என்று முன்பு அழைக்கப்பட்ட கேம்பல் சாலைக்கு டாங் வாங்கி நகர்ப்பகுதிக்குப் பெயரிடப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

இந்த நகர்ப்பகுதியின் மேற்கு முனையில் துவாங்கு அப்துல் ரகுமான் சாலை; மற்றும் கிழக்கு முனையில் அம்பாங் சாலை ஆகிய இரு சாலைகள் உள்ளன.

போக்குவரத்து

[தொகு]

5 கிளானா ஜெயா எல்ஆர்டி வழித்தடத்தில் ஒரு பகுதியான  KJ12  டாங் வாங்கி எல்ஆர்டி நிலையம், இந்த நகர்ப்பகுதியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. டாங் வாங்கி எல்ஆர்டி நிலையத்தின் அணுகல் நுழைவாயில், மத்திய கோலாலம்பூரின் வடகிழக்கு முனையில் அம்பாங் சாலையில் அமைந்துள்ளது.

டாங் வாங்கிக்கு அருகில் உள்ள புக்கிட் நானாஸ் நகர்ப்பகுதி, அம்பாங் சாலையின் குறுக்காகவும்; மற்றும் கிள்ளான் ஆறு நிலையத்திற்குப் பின்புறமாகவும் உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Jalan Dang Wangi, Kuala Lumpur - Postcode - 50100 - Malaysia Postcode". postcode.my. Retrieved 11 December 2025.
  2. "In the city centre of Kuala Lumpur, situated north of Dataran Merdeka, bordering Bukit Nanas and Medan Tuanku is a humble and tranquil area that those-in-the-know call Dang Wangi". Free Malaysia Today | FMT (in ஆங்கிலம்). 27 September 2018. Retrieved 11 December 2025.
  3. "Malay Myth and Changing Attitudes towards Nationalism: The Hang Tuah/Hang Jebat Debate", Reclaiming Adat, University of British Columbia Press, pp. 22–55, 2007-10-01, ISBN 978-0-7748-5366-8, retrieved 2023-09-11

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாங்_வாங்கி&oldid=4420981" இலிருந்து மீள்விக்கப்பட்டது