டாக்ஸோடியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டாக்ஸோடியம்[தொகு]

டாக்ஸோடியம் டிஸ்டிகம்

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : டாக்ஸோடியம் டிஸ்டிகம் 'Taxodium distrchum'

குடும்பம் : டாக்ஸோடிசியீ (Taxoidaceae)

இதரப் பெயர் : மொட்டை சைப்ரஸ், சதுப்பு சைப்ரஸ், மூட்டு சைப்ரஸ்.

மரத்தின் அமைவு[தொகு]

இம்மரம் சதுப்பு நிலத்தில் வளர்கிறது. இது 100 அடி உயரம் வளர்கிறது. இதன் இலைகள் சிறகு போல் உள்ளது. இதன் அடிப்பகுதி முட்டுக் கொடுப்பது போல் 10 அடி சுற்றளவிற்கு வோ; உள்ளது. சதுப்பு பகுதியில் பிராணவாயு வேருக்கு கிடைப்பதில்லை. இதனால் காற்றுறிஞ்சி வர்கள் ஆகாயத்தை நோக்கி வளர்கின்றன. ஒவ்வொரு வேறும் ஒரு அடி நீண்டு அடிப்பெறுத்து நுனி சிறுத்தும் இருக்கும். இவ்வோpன் நுனியில் துவாரம் உள்ளது. இதன் வழியாக காற்று உட்புறம் செல்கிறது. இதனால் பிராணவாயு கிடைக்கிறது. இம்மரத்தின் அடிப்பகுதி 10 அடி உயரத்திற்கு மென்மையான சோற்றது திசுக்கள் உள்ளது. முதிர்ச்சியடைந்த மரத்தின் அடிப்பகுதி வெற்றிடமாக உள்ளது. இம்மரம் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் உள்ளது. இம்மரம் படகு செய்ய பயன்படுகிறது. இவற்றில் மூன்று இன மரங்கள் உள்ளன. இவை மெக்சிகோவில் வளர்கிறது. இவ்வகை மரங்கள் அதிக வருடங்கள் உயிர் வாழ்கிறது. டாக்ஸோடியம் மூக்குருனேட்டம் என்கிற மரம் ஒசாக்கா என்கிற இடத்தில் 4000 ஆண்டுகளாக உள்ளது. இது 165 அடி உயரமும் 40 அடி விட்டமும் கொண்டுள்ளது. 112 அடி சுற்றளவு உடையது. ஊலகில் இரண்டாவது பொpய சுற்றளவு கொண்ட மரமாகும்.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாக்ஸோடியம்&oldid=2749217" இருந்து மீள்விக்கப்பட்டது