உள்ளடக்கத்துக்குச் செல்

டாக்டர் தருமாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், என்பது தமிழ்நாட்டின் கைப்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் திருமண உதவித் திட்டமாகும்.[1] இத்திட்டத்திற்கு டாக்டர் தர்மாம்பாள் நினைவாக, பெயரிடப்பட்டு தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தில் கணவனை இழந்த பெண்ணிற்கு நடக்கும் திருமணத்துக்கு உதவி தொகை வழங்கப்படும். பெண்ணின் வயது 20 ஆக இருக்க வேண்டும். மணமகனுக்கு இது முதல் திருமணமாகவும், அவருக்கு வயது 40க்கு மிகாமல் இருக்கவேண்டும் குடும்ப ஆண்டு வருமான வரம்பு இல்லை.

உதவித்தொகைக்கான விண்ணப்பத்துடன் கைம்பெண் சான்று, மறுமணம் செய்ததற்கான திருமண அழைப்பிதழ், மணமகன், மனமகள் ஆகிய இருவரின் வயதுச் சான்றுகள், பள்ளி அல்லது கல்லூரி அல்லது பாலிடெக்னிக் மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல் ஆகியவைகளை இணைத்து, திருமணம் முடிந்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் திருமண உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை மாவட்ட சமூகநல அலுவலர், அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்.

திருமண உதவித் தொகையும், தகுதிகளும்

[தொகு]
  • திட்டம் 1: கல்வித் தகுதி ஏதுமில்லை. இவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். இதில் மின்னணு பரிமாற்ற சேவை மூலமாக ரூபாய் 15,000 தொகையும், ரூபாய் 10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், தாலிக்கு 8 கிராம் தங்க நாணயம் வழகப்படும்.
  • திட்டம் 2: பட்டதாரிகள் எனில் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டயப் படிப்பு (Diploma Holders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். இவர்களுக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும். இதில் மின்னணு பரிமாற்ற சேவை மூலமாக ரூபாய் 30,000 தொகையும், 20.000 தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்கப்படும். மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஏழைப்பெண்களின் அரசு நிதியுதவித் திட்டம்". கட்டுரை. விகாஸ்பீடியா. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2019.
  2. ருக்மணி (19 மே 2019). "கைம்பெண் மறுமணத்தை ஆதரிக்கும் நிதியுதவி". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 12 மே 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]