டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடு உறைவிட மேல்நிலைப்பள்ளி
டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடு உறைவிட மேல்நிலைப்பள்ளி | |
---|---|
அமைவிடம் | |
இராமவரம், எம்ஜிஆர் தோட்டம் சென்னை, தமிழ்நாடு, 600089 இந்தியா | |
தகவல் | |
வகை | பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கான உறைவிட மேல்நிலைப்பள்ளி |
குறிக்கோள் | கடின உழைப்பு மேன்மை தரும் |
தொடக்கம் | 17 சனவரி 1990 |
அறக்கட்டளை தலைவர் | இராஜேந்திரன் எம் |
அதிபர் | டாக்டர் லதா இராசேந்திரன் |
பணிக்குழாம் | 70 |
பீடம் | 30 |
தரங்கள் | K-12 |
மாணவர்கள் | 880 |
நிறம் | பச்சை |
இணையம் | www |
டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சுத்திறனும், செவித்திறனும் குறைபாடுள்ளோருக்கான இல்லத்துடன்கூடிய மேல்நிலைப்பள்ளி (Dr. M. G. R. Home and Higher Secondary School for the Speech and Hearing Impaired)இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கல்வி நிறுவனமாகும். இது 1990 ஆம் ஆண்டு சனவரி 17ஆம் நாள் தொடங்கப்பட்டது.
விவரம்
[தொகு]இந்த நிறுவனமானது தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு ஆணையரின் அங்கீகாரம் பெற்றது.[1] இந்நிறுவனம் பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள தேசிய நிறுவனமான அலி யாவர் ஜங் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.[2] இப் பள்ளியானது மேல்நிலை வகுப்பு வரை நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் தொலைதூரக் கல்வித்திட்டம் மூலமாக பல்கலைக்கழக தேர்வுகளை மேற்கொள்கிறார்கள். மாணவர்கள் ஒருங்கிணைந்த முதன்மைப் பள்ளிகள் மூலமும் பயனடைகிறார்கள். இப்பள்ளியும் இல்லமும் எம்.ஜி.ஆர் நினைவு அறக்கட்டளை மூலம் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Home". scd.tn.gov.in.
- ↑ "Ali Yavar Jung National Institute For The Hearing Handicapped". Archived from the original on 15 September 2008. பார்க்கப்பட்ட நாள் 6 July 2008.